Home
Mobile

மிட்-ரேஞ்ச் மிரளுது.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 6260mAh பேட்டரி.. இது லிஸ்ட்லயே இல்ல.. எந்த மாடல்?

இந்தியாவில் இருக்கும் ஒன்பிளஸ் பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போட்டு வைத்த மாடலாக ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) இருக்கிறது. சீனாவில் வெளியான ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) மாடலின் ரீபிராண்ட் வெர்ஷனாக களமிறங்க இருப்பது, அதன் டிசைன் மற்றும் சிப்செட்டை வைத்தே தெரியவந்தது. ஆனால், இந்திய வெர்ஷனில் ஒரு புதிய வேரியண்ட் களமிறங்க இருப்பதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. இதனால் ஒன்பிளஸ் (OnePlus) பிரியர்கள் இது லிஸ்ட்லயே இல்லையே என்று சொல்லி படுகுஷிக்கு சென்றுவிட்டனர்.

ஒன்பிளஸ் 13எஸ் மாடல் ஓரிரு வாரங்களில் வெளியாக இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஏற்ப ஒன்பிளஸ் இந்தியா நிறுவனமானது, சிப்செட், டிஸ்பிளே, கலர் வேரியண்ட் போன்ற விவரங்களை தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. ஏற்கனவே, பிளாக் வெல்வெட் (Black Velvet) மற்றும் பிங்க் சாடின் (Pink Satin) ஆகிய கலர்கள் உறுதி செய்யப்பட்டன.

மிட்-ரேஞ்ச் மிரளுது.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 6260mAh பேட்டரி!

ஆனால், சீனாவில் வெளியான வெர்ஷனில் மூன்று கலர் வேரியண்ட்கள் இருந்தன. இதனால், இந்திய ஒன்பிளஸ் பிரியர்கள் மூன்றாவது கலருக்காக காத்திருந்தனர். சில பிரியர்கள் 2 கலர்களில் மட்டுமே வெளியாகும் என்றும் நினைத்தனர். ஆனால், இவர்களுக்கு ட்ரீட் கொடுத்தது போல மூன்றாவதாக ஒரு கலர் இருப்பதை, புதிய டீசர் மூலம் ஒன்பிளஸ் இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது.

சீனாவில் ஒயிட் ஷேட் கொண்ட கிரே கலர் கிடைத்தது, அதற்கு பதிலாக இந்தியாவில் கிரீன் கலர் வேரியண்ட் வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னதாக ஒன்பிளஸ் இந்தியா நிறுவனம், பிளஸ் கீ (Plus Key) பட்டனின் பீச்சர்களை உறுதி செய்தது. இப்போது, கலர் வேரியண்ட்களை உறுதி செய்துள்ளது. மற்ற பீச்சர்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்பது உறுதியாகிவிட்டது.

ஆகவே, இந்திய வெளியீடு தேதியை அந்த நிறுவனம் ஓரிரு தினங்களில் உறுதி செய்யவும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் 13எஸ் போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் (Octa Core Snapdragon 8 Elite 4nm) சிப்செட் மற்றும் 6.32 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைப்பது ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக உறுதியாகிவிட்டது. இப்போது, கலர் பீச்சர்களும் இணைந்துவிட்டன.

மிட்-ரேஞ்ச் மிரளுது.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 6260mAh பேட்டரி!

மற்ற பீச்சர்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்கு சீனாவில் வெளியான ஒன்பிளஸ் 13டி வெர்ஷனை பார்க்க வேண்டி இருக்கிறது. சீன வெர்ஷனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது. இதில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் இந்தியாவில் கட்டாயம் கிடைக்கும். ஆனால், கலர்ஓஎஸ்-க்கு பதிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் கிடைக்கலாம்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் (Crystal Shield Glass) புரொடெக்சன் மற்றும் எல்டிபிஓ அமோலெட் பேனல் கிடைக்கிறது. இந்தியாவிலும் இதே டிஸ்பிளே பீச்சர்கள் கிடைக்கும். இதேபோல கேமரா மற்றும் பேட்டரி பீச்சர்கள் ஒரே மாதிரியாகவே இருக்க போகின்றன. ஆகவே, 80W சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் பெரிய 6260mAh பேட்டரி எதிர்பார்க்கலாம்.

50 எம்பி ரியர் கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்க இருக்கிறது. மெயின் கேமராவில் ஓஐஎஸ், ஐஎம்எக்ஸ்906 சென்சார் உள்ளது. டெலிபோட்டோவில் 4K ரெக்கார்டிங், ஓஐஎஸ் மற்றும் 2X ஆப்டிகல் ஜூமிங் உள்ளது. 16 எம்பி செல்பீ உள்ளது. ரூ.40,000 பட்ஜெட்டுக்குள் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus New Teaser Confirms OnePlus 13s Colours Ahead of Launch Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X