அப்படி போடு.. 7000mAh பேட்டரி உடன் OnePlus-ன் புதிய Gaming Phone.. OnePlus 13s க்கு முன்பே அறிமுகம்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் இந்திய சந்தைக்கான ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதற்கு முன்பாக, அதாவது ஜூன் 5 ஆம் தேதிக்கு முன்பாக.. வருகிற மே 27 ஆம் தேதி அன்று சீன சந்தைக்கான 2 ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது.
இவ்விரு ஸ்மார்ட்போன்களும் அல்லது இரண்டில் ஏதேனும் ஒன்று - ஒன்பிளஸ் நோர்ட் சீரிஸின் கீழ் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்பதால்.. இந்த மாடல்கள் மீது இப்போதே ஒரு கண் வைப்பது நல்லது! என்ன மாடல்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இந்தியாவில் என்ன மாடல் ஆக அறிமுகம் செய்யப்படலாம்? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற மே 27 அன்று ஒன்பிளஸ் ஏஸ் 5 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்து உள்ளது. இதன்கீழ் 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் ஏஸ் 5 எக்ஸ்ட்ரீம் எடிஷன் (OnePlus Ace 5 Extreme Edition) ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளது.
மேலோட்டமாக பார்த்தாலும் சரி அல்லது ஆழமாக பார்த்தாலும் சரி - இந்த போன் கேமிங்கிற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும், இது பெர்பார்மென்ஸ், ஸ்டெபிலிட்டி மற்றும் லாங் பிளே சேஷ செஷன்களில் கவனம் செலுத்துகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
இது மீடியாடெக் டைமன்சிட்டி 9400 பிளஸ் (MediaTek Dimensity 9400+) சிப்செட் கொண்டு இயங்குகிறது, இது 3என்எம் செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது, இதன் உச்ச CPU வேகம் 3.73GHz ஆகும். இந்த சிப் CPU செயல்திறனில் 35% முன்னேற்றத்தையும் GPU செயல்திறனில் 41% முன்னேற்றத்தையும் தருகிறது என்று ஒன்பிளஸ் கூறுகிறது.
இந்த சிப்செட்டின் பவர் செயல்திறன் கேமிங்கின் போது 15% அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒட்டுமொத்த கேமிங் செயல்திறன் 8% அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதாயங்கள் அனைத்தும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் "Fengchi Gaming Core" இலிருந்து வருகின்றன, இது சிப்பில் நேரடியாக "ரைட்" செய்யப்பட்ட ஒரு சிஸ்டம்-லெவல் ஆப்டிமைசேஷன் ஆகும்.
மேலும் ஒன்பிளஸ் ஏஸ் 5 எக்ஸ்ட்ரீம் எடிஷன் ஆனது த்ரீ-சிப் அமைப்பை பயன்படுத்துகிறது. டைமன்சிட்டி 9400 பிளஸ் உடன் Lingxi Touch Control Chip மற்றும் ஒரு பிரத்யேக Wi-Fi கேமிங் சிப் (G1) ஆகியவைகளும் உள்ளன. இதெல்லாம் சேர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலான தொடர்ச்சியான கேமிங்கிற்கு நிலையான செயல்திறனை பராமரிக்கும் திறனை வழங்குகிறது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா என்று அழைக்கப்பட்டது. இதனுடன் ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேஸிங் என்கிற மாடலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைனில் லீக் ஆன ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேஸிங் எடிஷன் ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்களின் வழியாக - இரண்டும் நேர்த்தியான, பிளாட் ஆன கிளாஸ் பினிஷ் உடன் ஒரே மாதிரியான ரியர் வடிவமைப்பை பெறுவதை அறிந்துகொள்ள முடிகிறது
ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ராவின் மற்ற சிறப்பம்சங்களை பற்றி பேசினால், இது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் பிளாட் LTPS OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மறுகையில் உள்ள ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேசிங் ஸ்மார்ட்போனானது 1080பி ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77-இன்ச் OLED பேனலை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 16 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 1 டிபி UFS 4.0 ஸ்டோரேஜ், 7000mAh பேட்டரி மற்றும் 100W பாஸ்ட் சார்ஜிங் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. மறுகையில் உள்ள ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேசிங் ஸ்மார்ட்போன் ஆனது டைமன்சிட்டி 9400இ சிப்செட், 50 எம்பி ப்ரைமரி கேமரா, 16 எம்பி செல்பீ கேமரா, 7000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங் ஆகியவற்றை கொண்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








