OnePlus-ன் அடுத்த மினி ஸ்மார்ட்போன்.. இந்த முறை 6500mAh பேட்டரி, ட்ரிபிள் ரியர் கேமரா.. என்ன மாடல்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் "மினி ஸ்மார்ட்போன்" (Mini Smartphone) என்கிற கான்செப்ட், அதாவது "காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்" (Compact Flagship Smartphone) என்கிற கான்செப்ட் ஆனது செம்ம ஹிட் அடித்துள்ள நிலையில்.. இந்நிறுவனத்தின் அடுத்த "மினி போன்" குறித்த விவரங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக, ஏராளமான ஸ்மால் / மினி / காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை நாம் கண்டோம். இந்த போக்கு மேலும் ஈர்க்கப்பட்டு வருவதாக தெரிகிறது. பல்வேறு நிறுவனங்கள் தத்தம் காம்பாக்ட் ஸ்மார்ட்போன் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station), நோட்புக் செக் (Notebook Check) பகிர்ந்துள்ள ஒரு புகைப்படத்தில் 4 நான்கு மினி ஸ்மார்ட்போன்களை காண முடிகிறது. அதில் ஒன்று ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் - இதுவே ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் பர்ஸ்ட் லுக் ஆக (OnePlus 15T First Look) இருக்கலாம் (வலது பக்கத்தில் கடைசியாக உள்ள போன்).
பெயர் குறிப்பிடுவது போலவே ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) மாடல் ஆகவும், உலகளாவிய சந்தையில் ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) மாடல் ஆகவும் அறிமுகமான ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக இருக்கும். அதாவது இந்தியாவில் இது ஒன்பிளஸ் 15எஸ் மாடலாக வரும்.
அறியாதோர்க்கு நான்காம் எண்ணின் மீதான பயம் காரணமாக, கிழக்கு ஆசிய கலாச்சாரங்களில், குறிப்பாக சீனா, ஜப்பான், கொரியா மற்றும் வியட்நாமில் உள்ள மொழிகளில் நான்காம் எண்ணுக்கான சொல் ஆனது மரணம் என்கிற வார்த்தையுடன் ஒத்திருப்பதாலும் ஒன்பிளஸ் 14 சீரீஸ் (OnePlus 14 Series) அறிமுகம் செய்யப்படாது; மாறாக ஒன்பிளஸ் 15 சீரீஸ் (OnePlus 15 Series) தான் வரும்.
ஷாவ்மீ 16 சீரீஸ் (Xiaomi 16 Series) மற்றும் விவோ எக்ஸ்300 சீரீஸ் (Vivo X300 Series) உட்பட ஏராளமான காம்பாக்ட் போன்கள் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ளன. இந்த மாடல்களில் குறைந்தது 6,000mAh முதல் 7,000mAh பேட்டரிகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றில் சில மேம்படுத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ரீடருடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இவைகள் ஆப்டிகல் இன்-டிஸ்ப்ளே சென்சாரிலிருந்து 3டி அல்ட்ராசோனிக் ஸ்கேனராக (3D Ultrasonic Scanner) அப்கிரேட் செய்யப்படலாம். மேலும் இந்த மினி பிரீமியம் மாடல்களில் வயர்லெஸ் சார்ஜிங் ஆனது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கலாம்.
ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15டி அல்லது ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போனில் புதிய சிப் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ஒன்பிளஸ்-ன் வரலாற்று ரீதியாக குவால்காமின் சமீபத்திய சிலிக்கானை அதன் அப்டேடட் மாடல்களில் பயன்படுத்தியுள்ளது. எனவே ஒன்பிளஸ் 15எஸ் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 ஆல் இயக்கப்படலாம்.
கேமராவை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15எஸ் அல்லது ஒன்பிளஸ் 15டி மாடலில் மூன்றாவது ரியர் கேமரா சேர்க்கப்படலாம். கேமரா டிபார்ட்மென்ட்டில், குறிப்பாக அதன் ப்ரோ அல்லாத மாடல்களில், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் போட்டியாளர்களை விட மிகவும் பின்தங்கி உள்ளது. எனவே இந்த மாடலில் அவற்றின் முன்னோடிகளில் இல்லாத அல்ட்ராவைடு கேமரா பேக் செய்யப்படலாம்.
பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15டி / 15எஸ் ஸ்மார்ட்போன் ஆனது அதன் முன்னோடிகளை விட பெரிய பேட்டரியுடன் அனுப்பப்படலாம். ஒன்பிளஸ் 13 மாடல் ஏற்கனவே ஒரு சிறிய பாடியில் 5,850mAh பேட்டரியை கொண்டுள்ளது. அதே நேரத்தில் சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 13டி மாடலில் இன்னும் பெரிய 6,260mAh யூனிட் உள்ளது. ஆக ஒன்பிளஸ் 15எஸ் மாடலில் 6,500mAh பேட்டரி இடம்பெறலாம்.


Click it and Unblock the Notifications








