Home
Mobile

மொபைல் மார்க்கெட்டில் இடியை இறக்கிய OnePlus.. 9000mAh பேட்டரி உடன் புது போன்.. எந்த மாடல்?

7300mAh பேட்டரி உடனான ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த கையோடு, ஒன்பிளஸ் நிறுவனமானது 9000mAh பேட்டரி கொண்ட இன்னொரு புதிய ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்த மாடல்? எப்போது அறிமுகம்? என்ன விலைக்கு வரும்? வேறு என்னென்ன அம்சங்களை கொண்டிருக்காலம்?

ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் டிசம்பர் 17 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், இதே ஸ்மார்ட்போனின் சைனீஸ் வேரியண்ட் ஆன ஒன்பிளஸ் ஏஸ் 6டி (OnePlus Ace 6T) மாடல் ஆனது டிசம்பர் 3 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

OnePlus: 9000mAh பேட்டரி உடன் புது போன்.. எந்த மாடல்?

அதாவது டிச.3 அன்று சீனாவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஆனது டிச.17 அன்று இந்தியாவில் ஒன்பிளஸ் 15ஆர் ஆக அறிமுகமாகும். இதற்கிடையில் ஒன்பிளஸ் ஏஸ் 6 சீரீஸின் கீழ் - ஒன்பிளஸ் ஏஸ் 6 டர்போ (OnePlus Ace 6 Turbo) என்கிற இன்னொரு புதிய மாடலும் அறிமுகமாகும் என்றும், அது இந்தியாவிற்கு ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஆக வரும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலை உறுதிப்படுத்தும்படியாக "கூறப்படும்" ஒன்பிளஸ் ஏஸ் 6 டர்போ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (சிப்செட், டிஸ்பிளே மற்றும் பேட்டரி) குறித்த விவரங்கள்) நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (DCS) மற்றும் டெக் பிளாக்கர் அன்வின் (@ZionsAnvin) வழியாக ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

ஒன்பிளஸ் ஏஸ் 6 டர்போ / ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 6.78-இன்ச் எல்டிபிஸ் ஓஎல்இடி டிஸ்பிளே
- 1.5கே ரெசல்யூசன்
- 144 ஹெர்ட்ஸ்அல்லது 165 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- குவால்காமின் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்
- 9,000mAh பேட்டரி

எப்போது அறிமுகமாகும்? சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 6 டர்போ ஆனது 20256 ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் றிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இதே ஸ்மார்ட்போன் 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஆக இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் வெளியிடப்படலாம்.

டிசம்பர் 17 வரும் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இது குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Gen 5 chipset) கொண்டு உலகளவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் ஆக இருக்கும் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த புதிய சிப்செட் ஆனது சிபியு செயல்திறனில் 36 சதவீதம் வரை ஊக்கத்தையும், அதன் முன்னோடியை விட 11 சதவீதம் வரை சிறந்த ஜிபியு வெளியீட்டையும் வழங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அதன் முன்னோடியுடன் ஒப்பிடும்போது இது 46 சதவீதம் வரை மேம்படுத்தப்பட்ட ஏஐ திறன்களை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

உறுதி செய்யப்பட்டுள்ள மற்ற அம்சங்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15ஆர் ஆனது IP66 + IP68 + IP69 + IP69K தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மதிப்பீட்டை கொண்டிருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், அமேசான் இந்தியா வழியாக சார்கோல் பிளாக் மற்றும் மிண்ட் பிரீஸ் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். இந்தியாவில் இது ரூ.44,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus New 9000mAh Battery Phone Could be OnePlus Ace 6 Turbo in China OnePlus Nord 6 in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X