அமேசானில் அமோக கூட்டம்.. வெறும் ரூ.19999 க்கு 8000mAh பேட்டரி.. புது OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனும்.. ஒன்பிளஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய என் சீரிஸின் (N Series) கீழ் அறிமுகமான முதல் மாடலும்.. அமேசான் வழியாக ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. அது ஒன்பிளஸ் என்6 (OnePlus N6) ஸ்மார்ட்போனாகும்.
ஒன்பிளஸ் என்6 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6000 சீரிஸ் சிப்செட் மூலம் இயங்குகிறது. மேலும் இது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 8000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதில் சதுர வடிவ கேமரா மாட்யூலில் சிங்கிள் ரியர் கேமராவை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனின் அறிமுக விலையை பொறுத்தவரை பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் வேரியன்ட் ஆன 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் மீதான விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, மேசான் ப்ரைம் டே (Amazon Prime Day) சிறப்பு சலுகையாக இது ரூ.22,999 க்கு பதிலாக வங்கி சலுகைகளையும் சேர்த்து ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆபர் விலை ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனின் பிரெஷ் மின்ட் (Fresh Mint) மற்றும் மிட்நைட் க்ரீன் (Midnight Green) ஆகிய 2 கலர்களிலும் கிடைக்கும்.
ஒன்பிளஸ் என்6 விரிவான, முழு அம்சங்கள்:
- டூயல் சிம் (dual SIM) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆக்சிஜென்ஓஎஸ் 16 (OxygenOS 16)
- இரண்டு முக்கிய ஓஎஸ் அப்கிரேட்கள் (Upgrades) மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- 6.75 இன்ச் எச்டி எல்சிடி (HD LCD) டிஸ்பிளே
- 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் (refresh rate)
- HBM (high brightness mode) நிலையில் 1,200 நிட்ஸ் (nits) வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 ரேட்டிங்
- MIL-STD-810H இராணுவத் தரத்திலான நீடித்து உழைக்கும் சான்றிதழ்
- ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6360 அபெக்ஸ் சிப்செட்
- AnTuTu பெஞ்ச்மார்க்கிங் தளத்தில் ஒன்பிளஸ் என்6 ஆனது 6,15,800-க்கும் அதிகமான புள்ளிகளை பெற்றுள்ளது
- 6ஜிபி வரையிலான ரேம் (RAM)
- 128GB வரையிலான ஆன்போர்ட் ஸ்டோரேஜ் (onboard storage)
- வெப்ப மேலாண்மைக்காக 'வேப்பர் சேம்பர்' (vapour chamber)கூலிங் டெக்னாலஜி. இது 5,300 சதுர மிமீ வெப்பச் சிதறல் பரப்பளவை கொண்டுள்ளது.
- சிங்கிள் ரியர் கேமரா
- எப்/1.8 அப்பர்ச்சர் (aperture) கொண்ட 50 மெகாபிக்சல் கேமரா
- 10x வரையிலான டிஜிட்டல் ஜூம் வசதி
- 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 1080p/60 fps வரையிலான தரத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- டூயல்-வியூ (Dual-View) வீடியோ மோட்
- 8,000mAh பேட்டரி
- 1,600 முழுமையான சார்ஜிங் சுழற்சிகளுக்கு பிறகும் இதன் அசல் திறனில் சுமார் 80 சதவீதத்தை இது தக்கவைத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது
- மூன்று நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்கும் என்று ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது
- 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் (wired fast charging) வசதி
- 6.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் (reverse wired charging) வசதி
ஒன்பிளஸ் என்6-ஐ நம்பி வாங்க 3 காரணங்கள்:
01. மிகவும் எளிதாக 2 நாட்கள் வரை பேட்டரி லைஃப் வழங்கும் 8000mAh பேட்டரி
02. தினசரி பயன்பாட்டிற்கு நம்பகமான மீடியாடெக் டிமென்சிட்டி 6360 அபெக்ஸ் சிப்செட்
03.விலைக்கு ஏற்ற, இயல்பான தோற்றமளிக்கும் படங்களை பிடிக்கும் 50MP (f/1.8) ரியர் கேமரா
ஒன்பிளஸ் என்6-ஐ வாங்காமல் தவிர்க்க 2 காரணங்கள்:
01. 8000mAh பேட்டரி என்கிற அளவிலான பெரிய பேட்டரிக்கு 45W சார்ஜிங் என்பது சற்று மெதுவான சார்ஜிங் ஸ்பீட் ஆக தோன்றுகிறது.
02. ஒருபக்கம் காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை (மினி ஸ்மார்ட்போன்களை) அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்-ன் இந்த ஸ்மார்ட்போன் கையில் பிடிக்கும்போது சற்று பருமனாகவும், அளவில் பெரியதாகவும் உணரப்படுகிறது.


Click it and Unblock the Notifications