தூக்கி சாப்பிட்ட OnePlus.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. ஜூலை 31-க்கு அப்புறம் மிரளும்.. புது N சீரிஸ் மாடல்!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்ஜெட் மாடலாக வெளியாக இருக்கும் ஒன்பிளஸ் என்6எக்ஸ் (OnePlus N6x) ஸ்மார்ட்போனில் கிடைக்க இருக்கும் சிப்செட் குறித்த விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த சிப்செட் பட்ஜெட் மாடல்களில் கிடைக்கும் குவால்காம் நிறுவனத்தின் வெர்ஷனாக இருக்கிறது. இதுகுறித்த விவரங்கள் இதோ.
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் எப்போதும் பட்ஜெட் விலை மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனாலேயே ரூ.10,000 முதல் ரூ.20,000 வரையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் பட்டையை கிளப்புகின்றன. இதில் ஒன்பிளஸ் நிறுவனம், என் சீரிஸ் மாடல்களை பட்ஜெட்டில் களமிறக்க இருப்பதாக தெரிவித்ததிருந்தது.

ஆனால், முதலாவது என் சீரிஸ் மாடலாக வெளியான ஒன்பிளஸ் என்6 (OnePlus N6) ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,999 ஆக இருந்தது. இந்த விலைக்கே 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரியை மட்டுமே கொடுத்தது. ஆகவே, இதுதான் பட்ஜெட் மாடலா என்னும் கேள்வியும் ஒன்பிளஸ் பிரியர்கள் மட்டுமல்லாமல், மற்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களிடையேயும் எழுந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஒன்பிளஸ் நிறுவனமானது, ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போனை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வருகிற ஜூலை 31ஆம் தேதியில் இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போனின் வெளியீடு நடக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர இருப்பதும் உறுதி செய்யப்பட்டுவிட்டது.
இதனால், டிசைன், கலர் மற்றும் பேட்டரி விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. ஜூலை 31ஆம் தேதிக்குள் பெரும்பாலான பீச்சர்கள் தெரியவந்துவிடும். ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாகவே சிப்செட் விவரங்கள் கசிந்துவிட்டன. இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 (Qualcomm Snapdragon 695) சிப்செட் கிடைக்க இருக்கிறது.
இது 4ஜி மாடலாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் கசிந்துள்ளதால், 5ஜி மாடலாக இருக்கவும் வாய்ப்புள்ளது. எப்படி பார்த்தாலும், ஜூலை 31ஆம் தேதி நெருங்கிவிட்டதால், ஓரிரு நாட்களில் ஒன்பிளஸ் இந்தியா நிறுவனமே, சிப்செட் விவரங்களை வெளியிட்டுவிடும். அதுவரையில் பொறுத்து இருந்தா பார்க்கலாம்.
இப்போது, ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி கிடைக்கிறது. முன்னதாக வெளியான ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனில் 8000mAh பேட்டரி கிடைத்தது. ஆனால், இதில் குறைந்த கேபாசிட்டியே கிடைக்கிறது. ஆகவே, விலையில் மலிவாக இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகும்.
இந்த 7000mAh பேட்டரியில் 2.5 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். மேலும், பர்கண்டி ரெட் (Burgundy Red) மற்றும் ஐஸ் ப்ளூ (Ice Blue) கலர்களில் கிடைக்க இருக்கிறது. பில் ஷேப்டு டிசைனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொடுத்து இருக்கிறது. இந்த விவரங்கள் மட்டுமே அதிகரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களை எதிர்பார்க்கலாம். ஏனென்றால், பட்ஜெட் மாடல்களுக்கு இந்த வேரியண்ட்களே பெரும்பாலும் வெளியாகும். அதேபோல ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் வெளியாக இருக்கிறது. ஆகவே, ஆரம்ப விலை மேலும் மலிவாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications