Home
Mobile

ஜூலை 31-க்கு அப்புறம் இதுதான்.. OnePlus களமிறக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.. 2 கலர்களில் பிரீமியம் லுக்!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் பட்ஜெட் மாடலாக எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் என்6எக்ஸ் (OnePlus N6x) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மட்டுமல்லாமல், கலர் விவரங்களும் உறுதி செய்யப்பட்டு உள்ளன. பட்ஜெட் மாடலாக இருந்தும், பிரீமியம் லுக் கொடுக்கும்படி இந்த கலர்கள் மற்றும் டிசைன் இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வருகிற ஜூலை 31 ஆம் தேதியன்று இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஒன்பிளஸ் தளம் மட்டுமல்லாமல், அமேசான் (Amazon) தளத்திலும் விற்பனைக்கு கிடைக்க இருப்பதால், டிசைன் மற்றும் கலர் விவரங்கள் 2 தளங்களிலும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஜூலை 31-க்கு அப்புறம் இதுதான்.. OnePlus களமிறக்கும் பட்ஜெட் போன்!

பில் ஷேப்டு டிசைனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டுள்ளது. பர்கண்டி ரெட் (Burgundy Red) மற்றும் ஐஸ் ப்ளூ (Ice Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) கிடைக்கிறது. பேக் பேனலில் வெர்டிகல் லைன்கள் வருகின்றன.

ஆகவே, ஏஸ் சீரிஸ் மாடல்களில் கிடைத்த டெக்ச்சர்டு பிளாட் ரியர் பேனல் (Textured Flat Rear Panel) டிசைனை இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் பார்க்க முடிகிறது. அதேபோல இந்தியாவில் ஏற்கனவே வெளியாகிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 (OnePlus Nord CE5) ஸ்மார்ட்போனின் டிசைனை இதில் பார்க்க முடிகிறது. ஆகவே, அதன் பீச்சர்கள், விலையை பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 அம்சங்கள் (OnePlus Nord CE5 Specifications): 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1430 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 ஏபெர்ஸ் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8350 Apex 4nm) உள்ளது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஆக்ஸிஜன் ஓஎஸ் 15 (Oxygen OS 15) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.

16 எம்பி செல்பீ கேமராவை பேக் செய்துள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7100mAh பேட்டரியை கொடுத்துள்ளது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display optical fingerprint sensor) கிடைக்கிறது. ஆனால், ஒன்பிளஸ் என்6எக்ஸ் பட்ஜெட் மாடலாக இருக்கும் என்பதால் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 அறிமுகம் செய்யப்பட்ட போது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக இருந்தது. ஆனால், இது பட்ஜெட் மாடல் கிடையாது. ஆகவே, ஒன்பிளஸ் என்6எக்ஸ் பட்ஜெட் மாடலாக இருக்கும் என்பதால், ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், ஒன்பிளஸ் என்6 மாடல் ரூ.20,000 க்கும் மேல் விலை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus N6x With Burgundy Red Ice Blue Colours Launching in India on July 31 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X