Home
Mobile

பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி OnePlus போன்.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 13MP கேமரா.. எந்த மாடல்?

பட்ஜெட் விலையில் பிரீமியம் லுக் வேண்டும், அதே நேரத்தில் கேமிங் மற்றும் ஓடிடிக்கு ஏற்ப பேக்கப் இருக்க வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு ஒன்பிளஸ் என்6எக்ஸ் (OnePlus N6x) ஸ்மார்ட்போன் பக்காவாக இருக்கும். இப்போது, தள்ளுபடி விலையில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு அமேசான் தளத்தில் 22 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.20,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்வு செய்யப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.19,999 விலைக்கு வாங்கலாம். மேலும், கேஷ்பேக் மற்றும் நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகைகளும் கிடைக்கிறது.

பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி OnePlus போன்.. மாடல்?

பில் ஷேப்டு கேமரா டிசைன் கிடைக்கிறது. பர்கண்டி ரெட் (Burgundy Red) மற்றும் ஐஸ் ப்ளூ (Ice Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஃபுல் சார்ஜ் செய்தால் 2.5 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும். அல்ட்ரா பவர் சேவிங் மோட் (Ultra Power Saving Mode) உள்ளது. 1,600 சார்ஜிங் சைக்கிள் டியூரபிலிட்டி கொடுக்கிறது. இதற்கு பிறகும் 80 சதவீத பேட்டர் ஹெல்த் அப்படியே இருக்கும்.

ஒன்பிளஸ் என்6எக்ஸ் அம்சங்கள் (OnePlus N6x Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6360 ஏபெக்ஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6360 Apex 6nm) சிப்செட்டை இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு ( Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. 5300எம்எம்² வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் கொண்டுள்ளது. 48 மாதங்களுக்கு ப்ளூயன்சி சர்டிபிகேஷன் கிடைக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமராவை இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. ஏஐ போர்ட்ராய்டு க்ளோவ் (AI Portrait Glow) சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுபோக 1200 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் (HBM Brightness) கொண்ட டிஸ்பிளேவாக இது இருக்கிறது.

கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்கள் விரும்பும்படியான பேட்டரி செட்டப்பை இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) மற்றும் யூஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) கிடைக்கிறது.

பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்களை (Bottom-ported Speakers) கொடுத்து இருக்கிறது. 8.65 எம்எம் தடிமன் மற்றும் 214 கிராம் எடையுடன் இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) மற்றும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுத்து இருக்கிறது.

Best Mobiles in India

English summary
OnePlus N6x With 4GB RAM Available At 22 Percent Discount in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X