நாளை இந்தியாவில் களமிறங்கும் புது OnePlus 5ஜி போன்.. பட்ஜெட் விலை.. 7000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் நாளை (ஜூலை 31) இந்தியாவில் ஒன்பிளஸ் என்6எக்ஸ் (OnePlus N6x) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் நாளை மதியம் 12 மணி அளவில் அறிமுகமாகும். அதன்பின்பு அமேசான் தளத்தில் இந்த போனை வாங்க முடியும். இப்போது இந்த ஆன்லைனில் வெளியான இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
ஒன்பிளஸ் என்6எக்ஸ் அம்சங்கள் (OnePlus N6x Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 (Qualcomm Snapdragon 695) சிப்செட் உடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும். அதுவும் இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

7000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 2 நாட்களுக்கு மேல் பேட்டரி பேக்கப் வழங்கும்.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும். அதுவும் பர்கண்டி ரெட் (Burgundy Red) மற்றும் ஐஸ் ப்ளூ (Ice Blue) ஆகிய கலர்களில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
OxygenOS சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் என்6எக்ஸ் போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த புதிய போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒன்பிளஸ் போன் 50எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா அல்லது 32எம்பி கேமராவும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏஐ என்ஹான்ஸ்டு கிரியேட்டிவிட்டியுடன் (AI Enhanced Creativity), ஏஐ போர்ட்ராய்டு குளோவ் (AI Portrait Glow), ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ அன்பிளர் (AI Unblur) போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

6.7-இன்ச் டிஸ்பிளே உடன் இந்த புதிய ஒன்பிளஸ் என்6எக்ஸ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ்,3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஒன்பிளஸ் என்6எக்ஸ் போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஒன்பிளஸ் என்6எக்ஸ் போன் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications