Home
Mobile

அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. ரூ.17,499-க்கு 5ஜி போனை இறக்கிவிட்ட ஒன்பிளஸ்.. எந்த மாடல்?

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் என்6எக்ஸ் (OnePlus N6x) ஸ்மார்ட்போன் இன்று (ஜூலை 31) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளியாகி உள்ளது. இப்போது ஒன்பிளஸ் என்6எக்ஸ் மாடலின் விலை, விற்பனை மற்றும் விவரக்குறிப்புகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் என்6எக்ஸ் அம்சங்கள் (OnePlus N6x Specifications): 6.8-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த புதிய ஒன்பிளஸ் என்6எக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 900 நிட்ஸ் பிரைட்னஸ், 1570 x 720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ரூ.17,499-க்கு 5ஜி போனை இறக்கிவிட்ட ஒன்பிளஸ்.. எந்த மாடல்?

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6360 Apex (MediaTek Dimensity 6360 Apex) சிப்செட் உடன் இந்த புதிய ஒன்பிளஸ் என்6எக்ஸ் போன் வெளியாகி உள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒன்பிளஸ் போனில் 13எம்பி ரியர் கேமரா வசதி உள்ளது. ஆகவே இந்த போனின் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய ஒன்பிளஸ் போனில் உள்ளன.

ஆக்சிஜன்ஓஎஸ் 16 சார்ந்த சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

7000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 2 நாட்களுக்கு மேல் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W சார்ஜிங் வசதியும் உள்ளது.

MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் போன். அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதி இந்த போனில் இருக்கிறது. மேலும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த புதிய போன் வெளியாகி உள்ளது,

5ஜி, வைஃபை 5, புளூடூத் வி5.4, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஒன்பிளஸ் என்6எக்ஸ் போனில் உள்ளன. பர்கண்டி ரெட் (Burgundy Red) மற்றும் ஐஸ் ப்ளூ (Ice Blue)ஆகிய கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.

ரூ.17,499-க்கு 5ஜி போனை இறக்கிவிட்ட ஒன்பிளஸ்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் என்6எக்ஸ் விலை
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் என்6எக்ஸ் மாடலின் விலை ரூ.18,999-ஆக உள்ளது.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் என்6எக்ஸ் மாடலின் விலை ரூ.20,999-ஆக உள்ளது.

வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இணையதளங்களில் விற்பனைக்கு வரும். குறிப்பாக இந்த போனை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த புதிய ஒன்பிளஸ் போனை ரூ.17,499 விலையில் வாங்கிவிட முடியும்.

Best Mobiles in India

English summary
OnePlus N6x smartphone launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X