OnePlus அடிச்சான் பாருங்க.. ஆக.4-க்கு அப்புறம் இதுதான்.. 7000mAh பேட்டரி.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனத்தின் (OnePlus) ஒன்பிளஸ் என்6எக்ஸ் (OnePlus N6x) ஸ்மார்ட்போனின் விற்பனை தேதி உறுதி செய்யப்பட்டு உள்ளது. வெளியீட்டுக்கு முன்னதாகவே விற்பனை தேதி உறுதியாகி இருப்பதால், ஒன்பிளஸ் பிரியர்கள் மட்டுமல்லாமல், பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும் கஸ்டமர்களும் வெயிட்டிங் மோடில் இருக்கின்றனர்.
ஒன்பிளஸ் பிரியர்களுக்கு இந்த வாரமும் அடுத்த வாரமும் ஒரே ட்ரீட் போலத்தான் இருக்கிறது. ஆகஸ்ட் 31ஆம் தேதி ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பேட்டரி, டிஸ்பிளே உள்ளிட்ட முக்கிய பீச்சர்கள் அமேசானின் மைக்ரோசைட்டில் உறுதியாகி இருக்கிறது.

பொதுவாக ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதியன்று மட்டுமே விற்பனை தேதி தெரியவரும். ஆனால், இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போனின் தேதி வெளியீட்டுக்கு முன்பே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுவிட்டது. வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, அடுத்த வாரத்திலேயே தொடங்கிவிடும்.
இதனால், பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்கள், இந்த வெளியீட்டுக்கு காத்திருக்க தொடங்கிவிட்டனர். ஏனென்றால், ஜூலை 31ஆம் தேதி வெளியாகி அடுத்த 4 நாட்களுக்குள் விற்பனைக்கு கிடைக்க இருப்பதால், பீச்சர்களை பார்த்துவிட்டு வாங்கலாமா வேண்டாமா என்ற முடிவை எடுக்க முடியும்.
இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போனானது, ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனாலேயே பட்ஜெட் பிரியர்களிடையே எதிர்பார்ப்பில் இருக்கிறது. முன்னதாக வெளியான ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனைவிட மலிவான விலைக்கு வெளியாக இருக்கிறது. உறுதியான பீச்சர்களை பார்ப்போம்.
ஒன்பிளஸ் என்6எக்ஸ் அம்சங்கள் (OnePlus N6x Specifications): 2.5 நாட்கள் பேக்கப் கொடுக்கும்படி 7000mAh பேட்டரியை இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் 20.56 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக் கொடுக்கும். 133.56 மணி நேரங்களுக்கு மியூசிக் பிளேபேக் திடைக்கும்.
25.04 மணி நேரங்களுக்கு சோஷியல் மீடியோ ஸ்க்ரோலிங் கிடைக்கும். 11.26 மணி நேரங்களுக்கு வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ள முடியும். ஆகவே, அதிக பேட்டரி பேக்கப் எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் பக்கா ஆப்ஷனாக இருக்கும். 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளேவை கொடுக்க இருக்கிறது.
ஏஐ என்ஹான்ஸ்டு கிரியேட்டிவிட்டியுடன் (AI Enhanced Creativity) கேமரா பிரியர்களுக்கு ஏகப்பட்ட ஏஐ பீச்சர்களை கொடுக்க உள்ளது. ஆகவே, ஏஐ போர்ட்ராய்டு குளோவ் (AI Portrait Glow), ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ அன்பிளர் (AI Unblur) உள்ளிட்ட பீச்சர்களை கொடுக்க இருக்கிறது. பர்கண்டி ரெட் (Burgundy Red) மற்றும் ஐஸ் ப்ளூ (Ice Blue) கலர்களில் வெளியாக இருக்கிறது.
இந்த பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை பார்க்கையில், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 (Qualcomm Snapdragon 695) சிப்செட் கொடுக்கப்பட இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா கொடுக்கப்பட இருக்கிறது.
மேலும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடல்களில் கிடைக்க வாய்ப்புள்ளது. ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் வெளியாக இருக்கிறது. ஏனென்றால், முன்னதாக வெளியான ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனில் 8000mAh பேட்டரி கிடைத்தது. ஆரம்ப விலை ரூ.22,000 பட்ஜெட்டில் இருந்தது. ஆகவே, இது கம்மியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications