Home
Mobile

மொத்த மார்கெட் வெயிட்டிங்.. பட்ஜெட்ல OnePlus ஸ்மார்ட்போன்.. அமேசான் விற்பனை கன்பார்ம்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் புதிய என் சீரிஸ் மாடலாக ஒன்பிளஸ் என்6எக்ஸ் (OnePlus N6x) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த வெளியீட்டுக்கு முன்னதாகவே பட்ஜெட் செக்மெண்ட் கசிந்துள்ளது. அதேபோல விற்பனை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. இதுவொரு பட்ஜெட் மாடலாக இருப்பதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்ஜெட் மாடல்களாக என் சீரிஸ் இருக்கும் என்று சொல்லப்பட்டது. இதனால், ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் வாங்கிவிடலாம் என்று ஒன்பிளஸ் பிரியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், முதலாவதாக வெளியான ஒன்பிளஸ் என்6 (OnePlus N6) ஸ்மார்ட்போன் ரூ.22,999 பட்ஜெட்டில் வெளியாகியது. இதைவிட மலிவான விலைக்கு எதிர்பார்ப்பு இருந்தது.

மொத்த மார்கெட் வெயிட்டிங்.. பட்ஜெட்ல OnePlus ஸ்மார்ட்போன்.. மாடல்?

ஆகவே, இதை பூர்த்தி செய்ய ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய ஒன்பிளஸ் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. அமேசான் தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓரிரு வாரங்களில் இந்தியாவில் வெளியாகும். அதேபோல ஓரிரு நாட்கள் முக்கிய பீச்சர்கள் அமேசான் தளத்தில் உறுதி செய்யப்படும். இருப்பினும், ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனில் கிடைத்த பீச்சர்கள் பெரும்பாலும் இதில் இடம்பெறும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிப்செட்டில் மாற்றம் இருக்கலாம். மற்ற பீச்சர்கள் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்புள்ளது.

ஆகவே, ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனில் கிடைக்க பீச்சர்களை பார்க்க வேண்டும். அதேபோல விலையை பொறுத்தவரையில், இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் வெளியாக வாய்ப்புள்ளது. ஆரம்ப விலை ரூ.16,000 பட்ஜெட்டில் இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனாலேயே வெளியீட்டின் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஒன்பிளஸ் என்6 அம்சங்கள் (OnePlus N6 Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 ஏபெக்ஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6360 Apex 6nm) சிப்செட்டை இந்த ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) கொடுத்து இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் என்6 இருக்கிறது. 8 எம்பி செலபீ கேமராவிலும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது.

யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speakers) கிடைக்கிறது. 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SUPERVOOC Fast Charging) கொண்ட 8000mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், 5W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த பெரிய பேட்டரியுடன் 8.88 எம்எம் தடிமன் கொண்டுள்ளது. 224 கிராம் எடை கொடுத்துள்ளது.

IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistance) கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் இருக்கிறது. லேட்டஸ்ட் மாடல்களில் வழக்கமாக கிடைக்கும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் சர்டிபிகேஷனுடன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி உள்ளது. இதில் கிடைத்த பெரும்பாலான பீச்சர்கள் என்6எக்ஸ் மாடலில் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus N6x Launching Soon in India Under Rs 20000 Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X