வச்சி செஞ்சிட்டாங்க.. 31 சதவீத ஆஃபரில் 7000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 13MP கேமரா.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ரீலோடெட் (Great Indian Festival Reloaded) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் என்6எக்ஸ் (OnePlus N6x) ஸ்மார்ட்போன் டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது அமேசான் விற்பனையில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட பேசிக் வேரியண்ட்டின் விலையானது 31 சதவீத தள்ளுபடி போக ரூ.18,499 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. இதை பெற்றால் ரூ.17,499 விலைக்கு இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.1,500 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கும். ஆகவே, ரூ.16,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையையும் இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு பெற்று கொள்ளலாம். பர்கண்டி ரெட் (Burgundy Red) மற்றும் ஐஸ் ப்ளூ (Ice Blue) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது.
ஒன்பிளஸ் என்6எக்ஸ் அம்சங்கள் (OnePlus N6x Specifications): எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் (HBM Brightness) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் இருக்கும்.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6360 ஏபெக்ஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6360 Apex 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த விலைக்கு ஏற்ப ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டை ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது.
லேட்டஸ்ட் பீச்சர்களுடன ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) கொடுக்கப்பட்டு உள்ளது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரியை இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த பேட்டரிக்கு 5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 5300எம்எம்² வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆகவே, 48 மாதங்களுக்கு ப்ளூயன்சி சர்டிபிகேஷன் கொடுக்கும் மாடலாக இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் வருகிறது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், 2.5 நாட்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். அல்ட்ரா பவர் சேவிங் மோட் (Ultra Power Saving Mode) கிடைக்கிறது. 1,600 சார்ஜிங் சைக்கிளுக்கு பிறகும் 80 சதவீத பேட்டர் ஹெல்த் தொடர்ந்து கிடைக்கும்.
இந்த பேட்டரியுடன் 8.88 எம்எம் தடிமன் மற்றும் 224 கிராம் எடை கொடுத்துள்ளது. ஏஐ போர்ட்ராய்டு க்ளோவ் (AI Portrait Glow) உள்ளிட்ட பீச்சர்களுடன் 13 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.


Click it and Unblock the Notifications
