Home
Mobile

ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் போன்.. ஜூலை 31-ல் வருகிறது.. 7000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் என்6எக்ஸ் (OnePlus N6x) ஸ்மார்ட்போனை வரும் ஜூலை 31-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸமார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் வெளிவரும். மேலும் இந்த போனின் புகைப்படங்கள் மற்றும் முக்கிய விவர்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன.

ஒன்பிளஸ் என்6எக்ஸ் அம்சங்கள் (OnePlus N6x Specifications): 7000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவ இந்த போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 2 நாட்களுக்கு மேல் பேட்டரி பேக்கப் வழங்கும்.

ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் போன்.. எந்த மாடல்?

techgenyz தளம் வெளியிட்ட தகவலின்படி ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும். அதுவும் பர்கண்டி ரெட் (Burgundy Red) மற்றும் ஐஸ் ப்ளூ (Ice Blue) ஆகிய கலர்களில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6000-சீரிஸ் (MediaTek Dimensity 6000-series) சிப்செட் உடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதுவும் இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

OxygenOS சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கம் என்று கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் என்6எக்ஸ் போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த புதிய போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசானில் வெளியான படங்களில் ஒன்பிளஸ் என்6எக்ஸ் போன் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஆகவே இந்த ஒன்பிளஸ் போன் 50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா அல்லது 32எம்பி கேமராவும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் போன்.. எந்த மாடல்?

6.7-இன்ச் டிஸ்பிளே உடன் இந்த புதிய ஒன்பிளஸ் என்6எக்ஸ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ்,3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஒன்பிளஸ் என்6எக்ஸ் போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஒன்பிளஸ் என்6எக்ஸ் போன் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

photo credits: oneplus, amazon

Best Mobiles in India

English summary
OnePlus N6x images and specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X