Home
Mobile

OnePlus ஆட்டமே வேற.. பட்ஜெட்ல வருது புது N சீரிஸ் மாடல்.. டூயல் கேமரா.. டூயல் கலர்கள்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கும் ஒன்பிளஸ் என்6எக்ஸ் (OnePlus N6x) ஸ்மார்ட்போனின் கலர் மற்றும் டிசைன் விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. முந்தைய மாடல்களை விட கம்மியான விலையில் வெளியாக இருக்கும் இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போனில் 2 கலர் வேரியண்ட்கள் வெளியாக இருக்கின்றன.

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், ஒன்பிளஸ் நிறுவனமானது, என் சீரிஸ் மாடல்களை களமிறக்கி வருகிறது. முன்னதாக வெளியான ஒன்பிளஸ் என்6 (OnePlus N6) ஸ்மார்ட்போனும் பட்ஜெட்டில் கிடைத்தது. இருப்பினும், ரூ.20,000 பட்ஜெட் செக்மெண்ட்டில் கிடைத்ததால், அதைவிட மலிவான விலைக்கு எதிர்பார்ப்பு சென்றது.

OnePlus ஆட்டமே வேற.. பட்ஜெட்ல வருது புது N சீரிஸ் மாடல்.. டூயல் கேமரா!

இதற்கு ஏற்ப ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போனை களமிறக்க ஒன்பிளஸ் நிறுவனம் மும்முரம் காட்டிவருகிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதை உறுதி செய்தது. இப்போது, கலர் மற்றும் டிசைன் விவரங்கள் அதே அமேசான் தளத்தின் வழியாக தெரியவந்துள்ளது. 2 கலர் வேரியண்ட்கள் வெளியாக இருக்கின்றன.

அமேசானில் வெளியாகி இருக்கும் போஸ்டரில் பிங்க் மற்றும் ப்ளூ கலர்களை பார்க்க முடிகிறது. அதேபோல டூயல் கேமராவை கொண்டுள்ளது. ஸ்லிம் மாடலாகவும் இருக்கிறது. சிப் தட்டுப்பாடு காரணமாக 4ஜி மாடல்களை களமிறக்க ஒன்பிளஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆகவே, இது 4ஜி மாடலாகவும் வெளியாக வாய்ப்புள்ளது.

ஓரிரு வாரங்களில் வெளியாக இருப்பதால், விரைவில் அதிகாரப்பூர்வமாக தெரியவரும். இந்த விவரங்கள் மட்டுமே அமேசான் தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளன. மற்ற விவரங்கள் அதே அமேசான் தளத்தில் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்புள்ளது. இருப்பினும், பட்ஜெட்டில் கிடைக்கும் என்பதால் வெயிட்டிங் மோடில் ஒன்பிளஸ் பிரியர்கள் இருக்கின்றனர்.

முன்னதாக வெளியான ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனில் 2 வேரியண்ட்கள் கிடைக்கின்றன. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.22,999 பட்ஜெட்டிலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999 பட்ஜெட்டிலும் வெளியாகியது. ஆகவே, இதைவிட மலிவான விலைக்கே ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனில் 8000mAh பேட்டரி மற்றும் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைத்தது. மேலும், 5W ரிவர்ஸ் சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், என்6எக்ஸ் ஸ்மார்ட்போனில் இதைவிட பெரிய பேட்டரி எதிர்பார்க்க முடியாது. போஸ்டரில் ஸ்லிம் பாடியை பார்க்க முடிகிறது. 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே உள்ளது.

இதில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 1200 எம்பிஎம் பிரைட்னஸ் உள்ளது. 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6360 ஏபெக்ஸ் (6nm Octa Core MediaTek Dimensity 6360 Apex) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 6 கிடைக்கிறது. என்6எக்ஸ் மாடலில் கலர்ஓஎஸ் கிடைக்க வாய்ப்புள்ளது.

50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமராவை இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speakers) உள்ளது. இதையே ஒன்பிளஸ் ஏ6 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கலாம். IP65 ரேட்டிங் மற்றும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் உள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus N6x Colour Options Teased Ahead Of Launch in India Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X