கனவு விலையில் OnePlus N6 அறிமுகம்.. 3 நாள் நீடிக்கும் 8000mAh பேட்டரி.. ரூ.3000 ஆபர் விலையில் ஜூலை 4-ல் SALE!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஆகவும், ஒன்பிளஸ் என் சீரிஸின் (N Series) கீழ் வரும் முதல் மாடல் ஆகவும், விலை நிர்ணயம் அடிப்படையில் நார்ட் சீரீஸிற்கு (Nord Series) கீழே நிலைநிறுத்தப்பட்டு உள்ள - ஒன்பிளஸ் என்6 (OnePlus N6) இன்று இந்தியாவில் அறிமுகமானது
ஒன்பிளஸ் என்6 முக்கிய அம்சங்கள்: ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6000 சீரிஸ் சிப்செட் மூலம் இயங்குகிறது. மேலும் இது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 8000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதில் சதுர வடிவ கேமரா மாட்யூலில் சிங்கிள் ரியர் கேமராவை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் என்6 விலை, விற்பனை, சலுகைகள்: இந்தியாவில் ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹை-எண்ட் வேரியன்ட் ஆன 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது
சலுகைகளை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நிறுவனம் அமேசான் ப்ரைம் டே (Amazon Prime Day) சிறப்பு சலுகையாக ரூ.1,000 தள்ளுபடியையும், ஆக்சிஸ் பேங்க் (Axis Bank) மற்றும் எஸ்பிஐ (SBI) கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும்போது ரூ.2,000 உடனடித் தள்ளுபடியையும் வழங்குகிறது.
மேலும் வாடிக்கையாளர்கள் ஆறு மாதங்கள் வரையிலான வட்டி இல்லா தவணை முறை (no-cost EMI) வசதியையும் பெறலாம். ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய என் சீரிஸ் ஸ்மார்ட்போன் ஜூலை 4 ஆம் தேதி அன்று அமேசான் இந்தியா (Amazon India) வழியாக விற்பனைக்கு வரவுள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை பிரெஷ் மின்ட் (Fresh Mint) மற்றும் மிட்நைட் க்ரீன் (Midnight Green) ஆகிய 2 கலர்களில் வாங்கலாம்.
ஒன்பிளஸ் என்6 விரிவான, முழு அம்சங்கள்:
- டூயல் சிம் (dual SIM) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆக்சிஜென்ஓஎஸ் 16 (OxygenOS 16)
- இரண்டு முக்கிய ஓஎஸ் அப்கிரேட்கள் (Upgrades) மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- 6.75 இன்ச் எச்டி எல்சிடி (HD LCD) டிஸ்பிளே
- 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் (refresh rate)
- HBM (high brightness mode) நிலையில் 1,200 நிட்ஸ் (nits) வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 ரேட்டிங்
- MIL-STD-810H இராணுவத் தரத்திலான நீடித்து உழைக்கும் சான்றிதழ்
- ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6360 அபெக்ஸ் சிப்செட்
- AnTuTu பெஞ்ச்மார்க்கிங் தளத்தில் ஒன்பிளஸ் என்6 ஆனது 6,15,800-க்கும் அதிகமான புள்ளிகளை பெற்றுள்ளது
- 6ஜிபி வரையிலான ரேம் (RAM)
- 128GB வரையிலான ஆன்போர்ட் ஸ்டோரேஜ் (onboard storage)
- வெப்ப மேலாண்மைக்காக 'வேப்பர் சேம்பர்' (vapour chamber)கூலிங் டெக்னாலஜி. இது 5,300 சதுர மிமீ வெப்பச் சிதறல் பரப்பளவை கொண்டுள்ளது.
- சிங்கிள் ரியர் கேமரா
- எப்/1.8 அப்பர்ச்சர் (aperture) கொண்ட 50 மெகாபிக்சல் கேமரா
- 10x வரையிலான டிஜிட்டல் ஜூம் வசதி
- 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 1080p/60 fps வரையிலான தரத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- டூயல்-வியூ (Dual-View) வீடியோ மோட்
- 8,000mAh பேட்டரி
- 1,600 முழுமையான சார்ஜிங் சுழற்சிகளுக்கு பிறகும் இதன் அசல் திறனில் சுமார் 80 சதவீதத்தை இது தக்கவைத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது
- மூன்று நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்கும் என்று ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது
- 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் (wired fast charging) வசதி
- 6.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் (reverse wired charging) வசதி


Click it and Unblock the Notifications