Home
Mobile

OnePlus போட்ட போடு.. ரூ.20,000 பட்ஜெட்ல 8000mAh பேட்டரி.. 7 வருட ஹெல்த் வாரண்டி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்தியாவில் இருக்கும் ஒன்பிளஸ் (OnePlus) பிரியர்கள் மட்டுமல்லாமல், பட்ஜெட் விலையில் பெரிய பேட்டரி கேபாசிட்டியை எதிர்பார்க்கும் ஸ்மார்ட்போன் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டு வைத்த ஒன்பிளஸ் என்6 (OnePlus N6) ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய என் சீரிஸ் மாடல்களில் முதலாவது ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் என்6 வெளியாக இருக்கிறது. ஆரம்பமே பட்ஜெட் விலை மாடலாக இது இருக்கும் என்று ஒன்பிளஸ் இந்திய நிறுவனம் தெரிவித்ததால் எதிர்பார்ப்பு எகிறியது. இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 8000mAh பேட்டரி கொண்ட மாடலாக இது வெளியாகும் என்றும் ஒன்பிளஸ் தெரிவித்தது.

OnePlus போட்ட போடு.. ரூ.20,000 பட்ஜெட்ல 8000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அவ்வளவுதான், ஒட்டுமொத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களின் கவனமும் இந்த ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் மீது திரும்பிவிட்டது. வருகிற ஜூன் 30 ஆம் தேதி இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. டிசைன், கலர் விவரங்கள் அமேசான் (Amazon) மற்றும் ஒன்பிளஸ் இந்தியா (OnePlus India) தளங்கள் வழியாக உறுதி செய்யப்பட்டு விட்டன.

அதேபோல பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன. பெரிய பேட்டரி கொண்ட பட்ஜெட் மாடலாக இருந்தும், 7 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் வாரண்டி கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு பிறகும் 80 சதவீத ஹெல்த் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முதலில் அதிகாரப்பூர்வ பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் என்6 அம்சங்கள் (OnePlus N6 Specifications): 8000mAh பேட்டரி கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVooc Fast Charging) கொண்ட மாடலாக இருக்கிறது. வெறும் 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 1.5 மணி நேரங்களுக்கு யூடியூப் பிளேபேக் (YouTube Playback) கொடுக்கும் மாடலாக இருக்கிறது.

ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால், ஸ்டான்டர்டு யூசேஜில் 3 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும். டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் இருக்கிறது. பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே டிசைனை கொண்டுள்ளது. மின்ட் (Mint) மற்றும் கிரீன் (Green) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. 60 மாதங்களுக்கு ப்ளூயன்சி வாரண்டி கிடைக்கிறது.

இந்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகிவிட்டன. அதேபோல ரூ.15,000 முதல் ரூ.20,000 பட்ஜெட்டில் இந்த ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் வெளியாகும் என்பதையும் ஒன்பிளஸ் இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆகவே, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டில் இருந்து எதிர்பார்க்கலாம். இந்த மாடலின் விலை ரூ.15,999 பட்ஜெட்டில் இருக்கலாம்.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.19,999 பட்ஜெட்டில் கிடைக்கலாம். இந்த விலை யூகம் மட்டுமே. ஆனால், ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் இந்த ஒன்பிளஸ் என்6 மாடல் கிடைப்பது உறுதியாகும். மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை பார்க்கையில், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இதில் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது.

பட்ஜெட் மாடலாக இருக்கும் என்பதால், அமோலெட் டிஸ்பிளே கிடைக்குமா என்பது தெரியவில்லை. ஆகவே, எல்சிடி டிஸ்பிளேவை எதிர்பார்ப்பதில் தப்பில்லை. இருப்பினும், கூடுதல் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்படும். மீடியாடெக் அல்லது ஸ்னாப்டிராகன் சிப்செட் கிடைக்குமா என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும்.

Best Mobiles in India

English summary
OnePlus N6 With 8000mAh Battery 45W Charging Launch in India on June 30 Expected Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X