Home
Mobile

ஜூன் 30 அறிமுகமாகும் முன்பே Unboxing.. OnePlus N6 உடன் என்னென்ன FREE-ஆ வருது? என்ன விலை?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் புதிய பட்ஜெட் என்-சீரிஸ் மாடலான ஒன்பிளஸ் என்6 (OnePlus N6) ஸ்மார்ட்போன், இந்தியாவில் வருகிற ஜூன் 30 ஆம் தேதி அன்று அறிமுகமாகவுள்ளது. அறிமுகத்திற்கு முன்பாகவே இந்த ஸ்மார்ட்போனின் 'அன்பாக்சிங்' (unboxing) போட்டோக்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்த விவரங்கள் லீக் ஆகி, இந்த ஸ்மார்ட்போன் எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த தெளிவான பார்வையை நமக்குத் தருகின்றன.

பிரெஷ் மின்ட் (Fresh Mint) கலர் ஆப்ஷனில் உள்ள ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸ் (Retail Box) மற்றும் அதில் உள்ள அக்ஸசரீஸ்களை (Accessories) காட்டும் அன்பாக்சிங் ன படங்களை டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் (Abhishek Yadav), எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்து உள்ளார்.

OnePlus N6 உடன் என்னென்ன FREE-ஆ வருது? என்ன விலை?

இந்த ஸ்மார்ட்போனுடன் ஏற்கனவே ஸ்க்ரீனில் ஒட்டப்பட்ட ஸ்கிரீன் ப்ரொடெக்டர் (screen protector) மற்றும் பயனுள்ள கூடுதல் பொருட்களும் வருகின்றன: அவைகள் 45W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜர்,யுஎஸ்பி-சி (USB-C) கேபிள், டிரான்ச்ப்ரென்ட் சிலிகான் கேஸ் (Clear silicone case), சிம் கார்டு எடுக்க உதவும் டூல் (SIM ejector tool) மற்றும் வழக்கமான ஆவணங்கள் உள்ளன. செலவை குறைக்க பல நிறுவனங்கள் சார்ஜரை தவிர்த்து வரும் நிலையில், ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் தொடர்ந்து வழங்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

என்னென்ன அம்சங்கள்? ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ப்போன் ஏற்கனவே இதன் முக்கிய சிறப்பம்சங்களை டீஸ் செய்துள்ளது. இதில் 60fps வீடியோவை எடுக்கும் திறன் கொண்ட 50MP ப்ரைமரி ரியர் கேமராவும், டிஸ்பிளேவின் 'பஞ்ச்-ஹோல்' (punch-hole) வடிவமைப்பில் 8MP செல்பீ கேமராவும் இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

இதன் சிறப்பம்சமே 45W வேகமான சார்ஜிங் வசதியுடன் கூடிய பிரம்மாண்டமான 8,000mAh பேட்டரிதான். இது பல நாட்களுக்கு பயன்பாட்டை வழங்கும் திறன் கொண்டது. நீண்ட நேரப் பயன்பாட்டின் போது போன் சூடாவதைத் தடுக்க, இதில் 5,300 mm² அளவுள்ள பெரிய 'வேப்பர் சேம்பர்' (vapor chamber) கூலிங் சிஸ்டம் உள்ளது.

இது மீடியாடெக் டிமென்சிட்டி 600 சீரீஸ் (MediaTek Dimensity 6000-Series) சிப் (ஒருவேளை 6300 மாடலாக இருக்கலாம்) மற்றும் 6ஜிபி ரேம் மூலம் இயங்கும் என்றும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மற்றும் OxygenOS 16 உடன் வரும் என்றும் வதந்திகள் தெரிவிக்கின்றன. இந்த காம்பினேஷன் - தினசரி பணிகள், சோஷியல் மீடியா பயன்பாடு மற்றும் சாதாரண கேமிங் ஆகியவற்றை சிறப்பாகக் கையாளும் என்பதில் சந்தேகமே வேண்டாம்

என்ன விலைக்கு வரலாம்? ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.25,000-ஐ சுற்றிய விலைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரிய பேட்டரி உடன் வருவதால், ​​இந்த விலைப்பிரிவில் இது மிகவும் கவர்ச்சிகரமான தேர்வுகளில் ஒன்றாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

ஒட்டுமொத்தமாக பார்க்கையில், பேட்டரி லைஃப், சீரான செயல்பாடு மற்றும் சமரசமற்ற தரத்தை விரும்பும் இளைஞர்களை கவரும் வகையில், நியூ, நியோ, நெவெர் ஆப் (New, Neo, Never Off) என்கிற அணுகுமுறையுடன் பட்ஜெட் வாடிக்கையாளர்களை மீண்டும் ஈர்க்க ஒன்பிளஸ் மேற்கொள்ளும் முயற்சியாகவே ஒன்பிளஸ் என்6 தோன்றுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் மற்றும் துல்லியமான விலை உள்ளிட்ட முழு விவரங்களும் வருகிற ஜூன் 30 ஆம் தேதி அன்று நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் தெரியவரும். இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் மற்றும் முன்னோட்டங்கள் எல்லாமே- ஒரு பட்ஜெட் போனுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு சித்திரத்தையே காட்டுகின்றன. விலை தான் இதன் வெற்றியை தீர்மானிக்கும்.

Best Mobiles in India

English summary
OnePlus N6 Unboxing Photos Leaked Ahead India Launch on June 30 See Specifications Expected Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X