ஜூன் 30-க்கு அப்புறம் இதுதான்.. பட்ஜெட்ல புது OnePlus ஸ்மார்ட்போன்.. டூயல் ரியர் கேமரரா.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் பட்ஜெட் விலையில் களமிறங்க இருக்கும் ஒன்பிளஸ் என்6 (OnePlus N6) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. நோர்ட் சீரிஸ் மாடல்களைவிட மலிவான விலைக்கு கிடைக்க இருப்பதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ் பிரியர்களுக்கு பட்ஜெட்டில் விலைக்கு கிடைக்கும் மாடல்கலாக இப்போது நோர்ட் சீரிஸ் மட்டுமே இருக்கிறது. பிளாக்சிப் மாடல்களைவிட மலிவான விலையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க திட்டமிட்டால், இந்த சீரிஸ் மாடல்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும். இந்த சீரிஸில் கூட மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன்கள் வருகின்றன.

ஆகவே, பட்ஜெட்டுக்கு பிரத்யேகமாக ஒரு சீரிஸை களமிறக்கினால், நன்றாக இருக்கும் என்று ஒன்பிளஸ் பிரியர்கள் நினைத்தனர். இவர்களுக்காகவே புதிய என் சீரிஸ் (N Series) மாடல்கள் களமிறங்க இருக்கின்றன. நியோ (Neo) சீரிஸ் என்பதை என் சீரிஸ் என்று ஒன்பிளஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதில் முதலாவது மாடலாக ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது.
வருகிற ஜூன் 30ஆம் தேதியன்று, இந்த ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. கிரீன் (Green) மற்றும் பிளாக் (Black) கலர்களை கொண்டுள்ளது. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) உள்ளது. பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (Punch-hole Display) கொடுத்து இருக்கிறது.
யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே தெரியவந்துள்ளன. மற்ற பீச்சர்கள் உறுதி செய்யப்படவில்லை. ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப விலை ரூ.18,000 பட்ஜெட்டில் இருக்க வாய்புள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே, பட்ஜெட் விலை ஒன்பிளஸ் மாடலாக இது இருக்கும்.
இந்த ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் வெளியாகும் அதே தேதியில் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 (OnePlus Nord Buds 4) வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 மாடலும் அமேசான் தளத்தில் கிடைக்க இருக்கிறது. ஆகவே, 2 மாடல்களுக்கும் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு இருக்கிறது. வரும் நாட்களில் பீச்சர்கள் உறுதி செய்யப்பட இருக்கிறது.
கடந்த மாதம் வெளியான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் (OnePlus Nord CE6 Lite) ஸ்மார்ட்போனும் ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆகவே, இதில் கிடைக்கும் பீச்சர்களை ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனிலும் எதிர்பார்க்கலாம். ஆகவே, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ் என்6 அம்சங்கள் (OnePlus N6 Specifications): 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 ஏபெக்ஸ் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Apex 4nm) சிப்செட், மாலி ஜி615 எம்சி 2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிடைக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா, 2 எம்பி மோனோகுரோம் கேமரா + 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 10W ரிவர்ஸ் சார்ஜிங்குடன் 7000mAh பேட்டரி கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.20,999 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதைவிட மலிவான விலைக்கு ஒன்பிளஸ் என்6 வெளியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications