ஓ.. இது வேறயா.. ரூ.20000 க்கு 8000mAh பேட்டரி.. ஜூன் 20-ல் வரும் புது OnePlus N6 மாடல்.. 4G போன்-ஆ, 5G போன்-ஆ?
வருகிற ஜூன் 30 ஆம் தேதி அன்று ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது ஒன்பிளஸ் என்6 (OnePlus N6) என்கிற புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே இது ரூ.20000 க்கும் குறைவான விலையில் வரும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ஒன்பிளஸ்-ன் பட்ஜெட் விலை ஸ்மார்போன்கள் ஆன ஒன்பிளஸ் நார்ட் சிஇ6 லைட் 5ஜி மற்றும் ஒன்பிளஸ் நார்ட் சிஇ6 5ஜி ஆகிய மாடல்களின் விலைகள் இரண்டு முறை உயர்த்தப்பட்டு விட்டது. இதற்கிடையில் தான் ரூ.20000 க்குள் வரும் ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி மாடலா அல்லது 5ஜி மாடலா என்கிற சந்தேகம் கிளம்பியது.

அந்த சந்தேகத்தை தீர்க்கும்படியான ஒரு தகவல் கேஜெட்ஸ்360 வழியாக கிடைத்துள்ளது. கேஜெட்ஸ்360-ன் சமீபத்திய அறிக்கையின்படி, CPH2955 என்ற மாடல் நம்பரை கொண்ட, இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஒன்று கீக்பெஞ்ச்சில் (Geekbench) இடம்பெற்றுள்ளது. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவின் கூற்றுப்படி, இந்த மாடல் நம்பர் வரவிருக்கும் ஒன்பிளஸ் என்6-ஐ சேர்ந்தது.
இந்த தகவல்கள் ஆக்டா-கோர் (Octa-core) மீடியாடெக் எம்டி6835 சிப்செட் இருப்பதை வெளிப்படுத்துகின்றன. இது மீடியாடெக் டிமென்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) அல்லது டிமென்சிட்டி 6100 பிளஸ் (Dimensity 6100 Plus) சிப்பாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இரண்டில் எதுவாக இருந்தாலும் ஒன்பிளஸ் என்6 மாடல் ஒரு 5ஜி ஸ்மார்ட்போனாகத்தான் இருக்கும். ஏனென்றால் மேற்குறிப்பிட்ட 2 சிப்களுமே 5ஜி சிப் ஆகும்.
குறிப்பிட்ட சிப் ஆனது 5.49GB ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது, இது சந்தையில் 6GB ரேம் ஆக குறிப்பிடப்பட வாய்ப்புள்ளது. இந்த ஸ்மார்ட்போனில், ARM மாலி-G57 MC2 ஜிபியு மற்றும் ஆண்ட்ராய்டு 16 (Android 16) ஓஎஸ் ஆகியவாய்களும் இடம்பெறலாம்என்றும் வெளியான தகவல் உறுதிப்படுத்துகிறது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, சமீபத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனில் 8,000mAh பேட்டரி இடம்பெறும் என்பதையும் வெளிப்படுத்தி இருந்தது. இதன் மூலம் நீண்ட நேரம் உழைக்கும் திறன் (endurance) இதன் முக்கிய சிறப்பம்சமாக (USP) இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த பேட்டரி மூன்று நாட்கள் வரை பயன்பாட்டை வழங்கும் என்றும், ஏழு ஆண்டுகள் வரை சீரான செயல்திறனைத் தக்கவைக்கும் என்றும் ஒன்பிளஸ் கூறுகிறது.
ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் 5ஜி புதிய விலை: கடந்த மே 7 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. நினைவூட்டும் வண்ணம் நார்ட் சிஇ 6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோஎரேஜ் ஆப்ஷன் ரூ.20,999 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டது.
பின்னர் இவைகள் முறையே ரூ.22,999, ரூ.25,999 மற்றும் ரூ.28,999 ஆகவும் விலை உயர்த்தப்பட்டன. இப்போது இரண்டாவது முறையாக; மீண்டும் விலை உயர்த்தப்பட்டு உள்ளன. சமீபத்திய விலை உயர்விற்கு பின்னர் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.25,999 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.27,999 ஆகவும் மற்றும் ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.30,999 ஆகவும் உயர்ந்துள்ளது. அதாவது ரூ.20000-க்கு நெருக்கமான பட்ஜெட்டில், 1 மாதத்திற்கு முன் அறிமுகமான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இப்போது ரூ.30,000 பட்ஜெட்டை தொட்டுள்ளது.


Click it and Unblock the Notifications