Amazon ஒரே போடு.. வெறும் ரூ.14,999-க்கு 7000mAh பேட்டரி OnePlus போன்.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2026 (Amazon Great Indian Festival 2026 Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் என்6 லைட் (OnePlus N6 Lite) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
அமேசான் விற்பனையில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.15,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.1,000 தள்ளுபடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, ரூ.14,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது. இதில் ரூ.1,250 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

ஒன்பிளஸ் என்6 லைட் அம்சங்கள் (OnePlus N6 Lite Specifications): இந்த 6.75 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 900 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் சப்போர்ட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS), ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டும் இடம்பெற்றுள்ளது. 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், கூடுதலாக 2 டிபி வரை மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு பயன்படுத்தும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை, ஓம்னிவிஷன் ஓவி13பி10 (OmniVision OV13B10) சென்சார் கொண்ட 13 எம்பி மெயின் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா மூலம் 1080p தரத்தில் வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும். 5 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 720p தரத்தில் வீடியோ ரெக்கார்டிங் செய்யலாம். மேலும், ஏஐ அசிஸ்டன்ஸ் சப்போர்ட்டும் இடம்பெற்றுள்ளது.
இந்த ஒன்பிளஸ் என்6 லைட் ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், மற்ற டிவைஸ்களுக்கு சார்ஜ் வழங்கும் வகையில் 5W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8.95 எம்எம் தடிமன் மற்றும் 215 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது.
பாதுகாப்புக்காக சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வழங்கப்பட்டுள்ளது. ஆடியோ வசதிக்காக பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) மற்றும் யூஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) சப்போர்ட் இடம்பெற்றுள்ளது. மேலும், IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதியும், MIL-STD-810H சர்டிபிகேஷன் உள்ளது.
கனெக்டிவிட்டி வசதிகளுக்காக டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-ஃபை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS) மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் ஹைப் (Midnight Hype), நியோ கிரீன் (Neo Green) ஆகிய இரண்டு கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications
