Home
Mobile

நாளை இந்தியாவில் அறிமுகமாகும் புது ஒன்பிளஸ் போன்.. 7000எம்ஏஎச் பேட்டரி.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் என்6 லைட் (OnePlus N6 Lite) ஸ்மார்ட்போனை நாளை (செப்டம்பர் 22) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். இந்நிலையில் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளன. இப்போது இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒன்பிளஸ் என்6 லைட் அம்சங்கள் (OnePlus N6 Lite Specifications): 6.75-இன்ச் பிளாஸ் டிஸ்பிளே உடன் ஒன்பிளஸ் என்6 லைட் போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த ஒன்பிளஸ் போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நாளை இந்தியாவில் அறிமுகமாகும் புது ஒன்பிளஸ் போன்.. எந்த மாடல்?

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் ஒன்பிளஸ் என்6 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (ip64 dust and splash resistance) உடன் ஒன்பிளஸ் என்6 லைட் ஸ்மார்ட்போன் வெளியாகும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமான யுனிசாக் டி7250 (Unisoc T7250)சிப்செட் உடன் ஒன்பிளஸ் என்6 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

13எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஒன்பிளஸ் என்6 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியேகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி அல்லது 8எம்பி கேமரா இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக 7000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த ஒன்பிளஸ் என்6 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் மூன்று நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒன்பிளஸ் என்6 லைட் ஸ்மார்ட்போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் என்6 லைட் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus N6 Lite will be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X