செப்டம்பர் 22-ல் களமிறங்கும் புதிய ஒன்பிளஸ் 5ஜி போன்.. 7000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் என்6 லைட் (OnePlus N6 Lite) ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 22-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். அதுவும் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்கள் இந்த போனில் உள்ளன. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போனின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
ஒன்பிளஸ் என்6 லைட் அம்சங்கள் (OnePlus N6 Lite Specifications): 7000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த ஒன்பிளஸ் என்6 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் மூன்று நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

6.75-இன்ச் பிளாஸ் டிஸ்பிளே உடன் ஒன்பிளஸ் என்6 லைட் போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. அதேபோல் இந்த போனின் எடை 215 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
MIL-STD-810H சர்டிபிகேஷன் கொண்ட மாடலாக ஒன்பிளஸ் என்6 லைட் போன் போன் இருக்கும். மிட்நைட் ஹைப் மற்றும் நியோ கிரீன் ஆகிய இரண்டு கலர்களில் இந்த போன் வாங்க கிடைக்கும். தற்போது இந்த போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். இப்போது ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் என்6 போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஒன்பிளஸ் என்6 அம்சங்கள் (OnePlus N6 Specifications): ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6360 அபெக்ஸ் (Octa Core MediaTek Dimensity 6360 Apex) சிப்செட் உடன் ஒன்பிளஸ் என்6 போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
6.8-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1200 நிட்ஸ் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்சிஜென்ஓஎஸ் 16 (OxygenOS 16) மூலம் ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)உடன் ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor)வசதியும் இந்த புதிய ஒன்பிளஸ் போனில் உள்ளது.
50எம்பி ரியர் கேமரா உடன் இந்த ஒன்பிளஸ் போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக 10X வரையிலான டிஜிட்டல் ஜூம் வசதியும் இந்த புதிய போனில் உள்ளது. அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக வெப்ப மேலாண்மைக்காக 'வேப்பர் சேம்பர்' (vapour chamber) கூலிங் டெக்னாலஜி ஆதரவு கொண்டுள்ளது ஒன்பிளஸ் என்6 போன். மேலும் MIL-STD-810H இராணுவத் தரத்திலான நீடித்து உழைக்கும் சான்றிதழ் பெற்றுள்ளது இந்த புதிய போன். யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported speaker) போன்ற வசதிகளும் இந்த புதிய போனில் உள்ளன.
மேலும் இந்த போன் 8000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளியாகி உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன. தற்போது இந்த போன் ரூ.26,999-விலையில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications
