Home
Mobile

அமேசான் மிரளுது.. 32 சதவீத ஆஃபரில் 7000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. LCD டிஸ்பிளே.. OnePlus போன்.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ரீலோடெட் சேல் (Amazon Great Indian Festival Reloaded Sale) எனும் சிறப்பு விற்பனையில், ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலைக்கு கிடைக்கின்றன. இதில் ஒன்பிளஸ் என்6 லைட் (OnePlus N6 Lite) ஸ்மார்ட்போனானது, தள்ளுபடி மட்டுமல்லாமல், நோ-காஸ்ட் ஈஎம்ஐ உள்ளிட்ட சலுகைகளுடன் கிடைக்கிறது.

அமேசான் சிறப்பு விற்பனையில் 32 சதவீத ஆஃபரில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.16,999 விலைக்கு வாங்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளில் ரூ.750 தள்ளுபடி பெறலாம். மேலும், 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையில் வாங்கினால், ரூ.1,250 தள்ளுபடியுடன் வாங்கி கொள்ளலாம்.

அமேசான் மிரளுது.. 32 சதவீத ஆஃபரில் 7000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்!

ஒன்பிளஸ் என்6 லைட் அம்சங்கள் (OnePlus N6 Lite Specifications): ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட் கிடைக்கிறது. மேலும், மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) கொடுக்கப்பட்டு உள்ளது.

எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.75 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 900 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. 64 ஜிபி மெமரிக்கு மேல், 2 டிபிக்கு மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கும் மாடலாக இந்த ஒன்பிளஸ் என்6 லைட் இருக்கிறது.

ஓம்னிவிஷன் ஓவி13பி10 (OmniVision OV13B10) சென்சார் கிடைக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்காக 5 எம்பி ஃப்ரன்ட் கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. 720p வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கிறது.

மேலும், 7000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. பெரிய பேட்டரி இருப்பதால், 8.95 எம்எம் தடிமனை இந்த ஒன்பிளஸ் என்6 லைட் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மேலும், மொத்தமாக 215 கிராம் எடை கொண்ட மாடலாக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ஸ்லிம் மாடலாக இருக்காது.

இந்த ஒன்பிளஸ் என்6 லைட் ஸ்மார்ட்போனில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த விலைக்கு ஏற்ப IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ளது.

இந்த பட்ஜெட்டிலும் யூஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் என்6 லைட் ஸ்மார்ட்போனில் MIL-STD-810H சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) உள்ளது. மிட்நைட் ஹைப் (Midnight Hype), நியான் கிரீன் (Neo Green) கலர்களில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
OnePlus N6 Lite Gets Discount on Amazon Great Indian Festival Reloaded Sale Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X