ஒன்பிளஸ் அறிமுகம் செய்த புதிய 4ஜி போன்.. 7000எம்ஏஎச் பேட்டரி.. IP64 ரேட்டிங்.. 13எம்பி கேமரா.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் என்6 லைட் 4ஜி (OnePlus N6 Lite 4G) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் 7000ம்ஏஎச் பேட்டரி, ஐபி64 ரேட்டிங் உள்ளிட்ட அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளியாகி உள்ளது. இப்போது இந்த புதிய ஒன்பிளஸ் போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஒன்பிளஸ் என்6 லைட் 4ஜி அம்சங்கள் (OnePlus N6 Lite 4G Specifications): 6.75-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் ஒன்பிளஸ் என்6 லைட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 1,570 x 720 பிக்சல்ஸ், 900 நிட்ஸ் பிரைட்னஸ் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி உடன் ஒன்பிளஸ் என்6 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (ip64 dust and splash resistance)உடன் ஒன்பிளஸ் என்6 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளியாகி உள்ளது.
தரமான யுனிசாக் டி7250 (Unisoc T7250) சிப்செட் உடன் ஒன்பிளஸ் என்6 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
13எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஒன்பிளஸ் என்6 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியேகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி இடம்பெற்றுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
7000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த ஒன்பிளஸ் என்6 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் 3 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W சார்ஜிங் வசதியும் உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.
4ஜி, வைஃபை 5இ ஜிபிஎஸ், புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த புதிய ஒன்பிளஸ் என்6 லைட் 4ஜி போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது. மிட்நைட் ஹைப் மற்றும் நியோ கிரீன் ஆகிய கலர்களில் இந்த போன் வாங்க முடியும். மேலும் அமேசான் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications
