அமேசான் சுதந்திர தின விற்பனை 2026.. 8000mAh பேட்டரி.. 50MP கேமரா.. ஆஃபரில் OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் 2026 (amazon great freedom sale 2026) எனும் சிறப்பு விற்பனை தற்போது நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் என்6 மாடலும் தள்ளுபடி விலையில் வாங்கிவிட முடியும்.
அதாவது அமேசானில் நடைபெறும் சுதந்திர தின விற்பனையில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் என்6 மாடலுக்கு 26 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.22,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் கிடைக்கும். ஆகவே இந்த மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ஒன்பிளஸ் என்6 அம்சங்கள் (OnePlus N6 Specifications): தரமான ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6360 அபெக்ஸ் (Octa Core MediaTek Dimensity 6360 Apex) சிப்செட் உடன் ஒன்பிளஸ் என்6 போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
அதேபோல் 6.8-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1200 நிட்ஸ் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன.
அதுவும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்சிஜென்ஓஎஸ் 16 (OxygenOS 16) மூலம் ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
குறிப்பாக IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)உடன் ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor)வசதியும் இந்த புதிய ஒன்பிளஸ் போனில் உள்ளது.
இந்த ஒன்பிளஸ் போன் 50எம்பி ரியர் கேமரா உடன் வெளியாகி உள்ளது. குறிப்பாக 10X வரையிலான டிஜிட்டல் ஜூம் வசதியும் இந்த புதிய போனில் உள்ளது. அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

வெப்ப மேலாண்மைக்காக 'வேப்பர் சேம்பர்' (vapour chamber) கூலிங் டெக்னாலஜி ஆதரவு கொண்டுள்ளது ஒன்பிளஸ் என்6 போன். மேலும் MIL-STD-810H இராணுவத் தரத்திலான நீடித்து உழைக்கும் சான்றிதழ் பெற்றுள்ளது இந்த புதிய போன். யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported speaker) போன்ற வசதிகளும் இந்த புதிய போனில் உள்ளன.
இந்த போன் 8000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளியாகி உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications