Xiaomi, LAVA-லாம் சிதற போகுது.. ரூ.20000 க்கு OnePlus-ன் புதிய N Series ஸ்மார்ட்போன்!
இந்த வார தொடக்கத்தில், இந்தியாவில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் சீரீஸ் ஒன்றை அறிமுகப்படுத்த ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்து இருந்தன. அதை தொடர்ந்து தற்போது, இந்தியாவில் ஒன்பிளஸ் என் சீரீஸ் (OnePlus N Series) குறித்த அதிகாரப்பூர்வ டீசர் (teaser) வெளியிடப்பட்டுள்ளது.
பட்ஜெட் பிரிவை இலக்காக கொண்ட, முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் சீரீஸை இது உள்ளடக்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது, இந்நிறுவனத்தின் மிகவும் மலிவு விலை ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் (OnePlus Nord CE 6 Lite) ஸ்மார்ட்போன் உள்ளது; இதன் ஆரம்ப விலை ரூ.22,999 ஆகும்.

தனது புதிய என் சீரீஸை முன்னிலைப்படுத்தும் வகையில், அமேசான் இந்தியாவில் (Amazon India) ஒன்பிளஸ் நிறுவனம் ஒரு பிரத்யேக மைக்ரோசைட்டை (Microsite) வெளியிட்டுள்ளது. அதில் உள்ள டீசர் படத்தில், ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களைக் கொண்டு 'N' என்ற எழுத்து வடிவமைக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளது. இதில் வேறு எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை என்றாலும், ஒன்பிளஸ் படிப்படியாக கூடுதல் தகவல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் என் ஸ்மார்ட்போன் சீரீஸ்: என்ன எதிர்பார்க்கலாம்? கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின்படி, ஒன்பிளஸ் என் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இதற்கான டீஸர் வெளியாகிவிட்டதால், இந்த ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது. இந்த புதிய ஒன்பிளஸ் என் சீரீஸில் ரூ.20,000-க்கும் குறைவான விலையிலான போன்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம், நீண்ட காலமாக கவனம் செலுத்தாத 'பட்ஜெட்' ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் களமிறங்கவுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, தற்போது ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிக குறைந்த விலை ஸ்மார்ட்போனாக நார்ட் சிஇ6 லைட் உள்ளது; இதன் ஆரம்ப விலை ரூ.22,999 ஆகும். ரூ.20,000-க்கும் குறைவான விலையில் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டால், பட்ஜெட் விலை போன்களை வாங்குபவர்களுக்கும் ஒன்பிளஸ்-ன் ஹார்டுவேர் மற்றும் ஆக்ஸிஜன் ஓஎஸ்-ஐ அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இருப்பினும், ஷாவ்மீ (Xiaomi), லாவா (Lava) மற்றும் ஐக்யூ (iQOO) போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே, நீண்டகாலமாக, இந்த விலைப்பிரிவில் உள்ளதால், ஒன்பிளஸ் நிறுவனம் கண்டிப்பாக கடும் போட்டிகளை சந்திக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். பட்ஜெட் பிரிவில் ஒன்பிளஸ் என் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் என்னென்ன அம்சங்களை வழங்கப்போகிறது என்பதை வைத்தே, அதன் வெற்றியும் தீர்மானிக்கப்படும்
ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் விலை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோஎரேஜ் ஆப்ஷன் ரூ.20,999 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இதோடு சேர்ந்து அறிமுகமான ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனின் விலை, ஆபர், விற்பனை: இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.29,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.32,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் ஸ்மார்ட்போனின் முக்கியஅம்சங்கள்:
-144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 6.72-இன்ச் ஃபுல்-எச்டி+ (1,080 x 2,400 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே
- தூசி மற்றும் நீர் தெறிப்புகளை தாங்கும் IP64 ரேட்டிங்
- MIL-STD-810H சான்றிதழ்
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 7400 அப்பெக்ஸ் எஸ்ஓசி
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/2.88-இன்ச் ஓம்னிவிஷன் OV50D40 சென்சார் கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி கேமரா
- 2-மெகாபிக்சல் (எப்/2.4) இரண்டாம் நிலை கேமரா
- 89-டிகிரி பீல் ஆப் வியூ மற்றும் 10எக்ஸ் வரையிலான டிஜிட்டல் ஜூம்
- 4K/30 fps வரை வீடியோ ரெக்கார்டிங்
- 8-மெகாபிக்சல் (எப்/2.0) செல்பீ கேமரா
- 7,000mAh பேட்டரி
- 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்


Click it and Unblock the Notifications