இந்தியாவில் ஒருத்தரும் இதை எதிர்பார்க்கல.. ரூ.20000 க்கு புது OnePlus போன்.. வந்துட்டான் புது N-Series மாடல்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் இந்தியாவில் புதிய 'என் சீரிஸ்' (N series) மூலம் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரிவில் நுழைய திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது பட்ஜெட் பிரிவை மையமாக கொண்ட முற்றிலும் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் சீரீஸ் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பொதுவாக ஒன்பிளஸ் நிறுவனம் ஃபிளாக்ஷிப் (உயர்தர) மற்றும் மிட்-ரேஞ்ச் (நடுத்தர விலை) பிரிவுகளில் மட்டுமே ஸ்மார்ட்போன்களை வழங்கி வருகிறது; பட்ஜெட் விலை பிரிவில் இதுவரை போன்களை அறிமுகப்படுத்தியதில்லை. சமீபத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் நார்ட் சிஇ6 லைட் (OnePlus Nord CE6 Lite) ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை கூட ரூ.22,999 ஆகும். ஆனால், வரவிருக்கும் ஒன்பிளஸ் என் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.20,000-க்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் (Yogesh Brar) வழியாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஸ்மார்ட்ப்ரைஸ் (SmartPrix) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஒன்பிளஸ் என் சீரிஸ் என்பது பல்வேறு நிலைகளை (Tiers) இலக்காக கொண்ட பல ஸ்மார்ட்போன்களை உள்ளடக்கிய ஒரு புதிய பட்ஜெட் சீரீஸ் ஆக இருக்கும். அதாவது நாம், என் சீரிஸின் கீழ் ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து பல வகையான மலிவு விலையிலான ஸ்மார்ட்போன்களை எதிர்பார்க்கலாம்.
இப்போதைக்கு இந்த சீரீஸின் கீழ் வரும் ஸ்மார்ட்போன்கள் ரூ.20,000 க்கும் குறைவான விலையில் இருக்கும் என்றும் வெளியான அறிக்கை குறிப்பிடுகிறது. எனவே, இந்த சீரீஸின் கீழ் வரும் அனைத்து போன்களும் பட்ஜெட் பிரிவை சார்ந்ததாக இருக்குமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
எப்போது அறிமுகம்? ஒன்பிளஸ் நிறுவனம், இந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் புதிய என் சீரிஸை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதாவது, எதிர்பார்க்கப்படும் இந்த பட்ஜெட் விலை ஒன்பிளஸ் போன்களுக்காக நாம் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை. இன்னும் சில வாரங்களில் அறிமுகம் நடக்கலாம். விரைவில் அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்யப்படலாம்.
ஒன்பிளஸ் ஏற்கனவே நார்ட் (Nord) சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கொண்டிருப்பதால், இந்த புதிய சீரிஸின் பெயர் அல்லது பிராண்டிங்கின் கீழ் என்னெண்ணன் கிடைக்கும் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். ஏற்கனவே ரூ.20,000-க்கு குறைவான விலைப்பிரிவு கடும் போட்டி நிறைந்ததாக உள்ளது; இதில் ஷாவ்மீ (Xiaomi), லாவா (Lava) மற்றும் ஐக்யூ (iQOO) போன்ற நிறுவனங்களின் பெஸ்ட் போன்கள் ஏற்கனவே சந்தையில் உள்ளன. எனவே, ஒன்பிளஸ் இந்த பிரிவிலும் வாடிக்கையாளர்களுக்கு, பணத்திற்கு ஏற்ற சிறந்த மதிப்பை (value for money) வழங்க வேண்டியிருக்கும்.
என்னென்ன அம்சங்கள்? ஒன்பிளஸ் என் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் குறித்து இதுவரை எந்த விவரங்களும் வெளியாகவில்லை. எனவே, இது குறித்து எந்தவொரு முடிவிற்கும் வருவதற்கு முன் கூடுதல் விவரங்களுக்காக நாம் காத்திருக்க வேண்டும். ஒன்பிளஸ் நிறுவனம் ஃபிளாக்ஷிப் மற்றும் மிட்-ரேஞ்ச் பிரிவுகளில் செயல்திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் போன்களை வழங்குவதில் பெயர் பெற்றது.
இருப்பினும், பட்ஜெட் பிரிவில் அதற்கு இதுவரை பெரிய பிடிப்பு இல்லை. ஒன்பிளஸ் என் சீரிஸின் அறிமுகம் மூலம், நாட்டின் மிகவும் பிரபலமான விலைப்பிரிவுகளில் ஒன்றான ரூ.20000 க்குள் என்கிற விலைப்பிரிவுகளில் இந்நிறுவனம் தனது சந்தை இருப்பை விரிவுபடுத்தும் என்பதில் மட்டும் சந்தேகம் வேண்டாம்
ஜூன் 18-ல் அறிமுகமாகும் ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் சீரீஸ்: ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் (OnePlus Turbo 6X) என்கிற மாடல் பெயரின் கீழ் பெர்பார்மென்ஸை மையமாக கொண்ட ஒரு புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருவதாக வதந்திகள் வெளியான சில நாட்களிலேயே.. ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகமாகும் என்பதை உறுதி செய்துள்ளது
இதுவரை ஒன்பிளஸ் டர்போ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமானது இல்லை என்றாலும், சீனாவில் அறிமுகமாகும் இதுபோன்ற மாடல்கள் இந்திய சந்தையில் நார்ட் சீரீஸின் கீழ் ரீபிராண்டிங் செய்யப்படும் வழக்கம் உள்ளதால், ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் மீது நாம் ஒரு கண் வைப்பதில் எந்த தவறும் இல்லை.
சீன சமூக ஊடகத்தளமான வெய்போவில் ஒரு பயனர் கருத்துக்கு பதிலளிக்கும்போது, ஒன்பிளஸ் சீனாவின் தலைவர் ஆன லி ஜியே, டர்போ 6எக்ஸ் ஸ்மார்ட்போனின் லாஞ்சு டைம்லைனை வெளிப்படுத்தினார். அவர் ஜூன் 18 ஆம் தேதிக்கு முன்னர் இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகும் என்பதை உறுதிப்படுத்தினார். ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் மாடலுடன் சேர்ந்து ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ப்ரோ மாடலும் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications