இது அம்பானி கொடுக்குற ஆபர்.. அறிமுகமான வேகத்தில் OnePlus Open மீது அதிரடி சலுகை.. Reliance Digital அசத்தல்!
ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் ஓப்பன் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் (OnePlus Open Foldable Smartphone) இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற அக்டோபர் 27 முதல் திறந்த விற்பனைக்கு வர உள்ளது.
இந்த போனின் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் ஆனது ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த விலை உயர்ந்த ஸ்மார்ட்போனை மிகவும் மலிவான விலைக்கு விற்பனை செய்கிறது. அதாவது ஒன்பிளஸ் ஓப்பன் மீது மிகப்பெரிய அறிமுக சலுகை மற்றும் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

உங்களுக்கு அருகிலுள்ள எந்தவொரு ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் வழியாகவும் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனை நீங்கள் முன்பதிவு செய்யலாம். ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.1,39,999 ஆகும். இது 16 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் விலை நிர்ணயம் ஆகும்.
இருப்பினும் ஒன்பிளஸ் ஒப்பனை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.8000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ், ஐசிஐசிஐ வங்கி கார்டுகள் மற்றும் ஒன் கார்டு வழியாக ரூ.5000 வரை உடனடி தள்ளுபடிகள் மற்றும் இலவச ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 (OnePlus Buds Pro 2) மற்றும் அக்ஸிடென்டல் ப்ரொடெக்ஷன் பிளான் உள்ளிட்ட பிரத்யேக சலுகைகளை பெறலாம்.
முன்னரே குறிப்பிட்டபடி, ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் ஓப்பன் சேல் அதாவது திறந்த விற்பனை வருகிற அக்டோபர் 27 முதல் தொடங்கும். ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 1-120Hz டைனமிக் ரெப்ரெஷ் ரேட், 2268 x 2440 பிக்சல்ஸ் உடனான 7.82-இன்ச் 2கே Flexi-fluid LTPO 3.0 AMOLED இன்னர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
மேலும் 10-120Hz டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் ரெஸ்பான்ஸ் ரேட் மற்றும் 2,800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான 6.31-இன்ச் (1116 x 2484 பிக்சல்ஸ்) 2கே LTPO 3.0 சூப்பர் ஃப்ளூயிட் AMOLED அவுட்டர் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது, இந்த இரண்டு டிஸ்பிளேக்களுமே TÜV Rheinland Intelligent Eye Care சான்றிதழை பெற்றுள்ளன.
இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப் உடன் 16ஜிபி LPDDR5x ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (EIS), 85-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ, எப்/1.7 அபெர்க்ஷர், 1/1.43-இன்ச் சோனி LYT-T808 "பிக்சல் ஸ்டேக்டு" CMOS சென்சார் கொண்ட 48-மெகாபிக்சல் மெயின் கேமரா உள்ளது.
கூடவே 64-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளது. அது ஓஐஎஸ், இஐஎஸ், 33.4-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எப்/2.6 அபெர்க்ஷர் உடன் கூடிய OmniVision OV64B சென்சார் உள்ளது. இது 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம் மற்றும் 120x டிஜிட்டல் ஜூம் வரை ஆதரிக்கிறது. மூன்றாவது கேமராவாக இது 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது; இது மேக்ரோ கேமராவாகவும் வேலை செய்யும்.
மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இன்னர் டிஸ்பிளேவில், இஐஎஸ் மற்றும் 91-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 20-மெகாபிக்சல் மெயின் கேமராவும், இஐஎஸ், 88.5-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 32-மெகாபிக்சல் கேமராவும் உள்ளது. இது செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான கேமராக்களாக பயன்படும்.
கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் டூயல்-செல் 4,800mAh பேட்டரியை (3295 + 1510mAh) கொண்டுள்ளது. இது 67W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இருப்பினும் இதன் ரீடெயில் பாக்ஸில் 80W சார்ஜருடன் இடம்பெறும். ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் இந்த ஃபோல்டபிள் போன் ஆனது சாம்சங், ஒப்போ, மோட்டோ போன்ற நிறுவனங்களின் ஃபோல்டபிள் மற்றும் பிளிப் போன்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.


Click it and Unblock the Notifications








