Home
Mobile

புது OnePlus மினி மற்றும் Oppo மினி போன்கள்.. சைஸ்ல சிறுசு தான்.. ஆனா பவர் பிச்சுக்கும்.. எப்போ ரிலீஸ்?

யாரும் எதிர்பார்த்திடாத வகையில், ஒன்பிளஸ் (OnePlus) மற்றும் ஒப்போ (OPPO) நிறுவனங்கள் அதன் முதல் பிளாக்ஷிப் மினி ஸ்மார்ட்போன் (Flagship mini smartphone) மாடல்களை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை, ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் வரிசையில் எந்தவொரு மினி வெர்ஷன் ஸ்மார்ட்போன் மாடலும் அறிமுகம் செய்யப்படாமல் இருந்தது. ஆனால், இப்போது இரண்டு நிறுவனங்களும் புதிய மினி ஸ்மார்ட்போன் சாதனங்களை உருவாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. வெளிவரவிருக்கும் புதிய ஒன்பிளஸ் மினி போன் மற்றும் ஒப்போ மினி போன் பற்றிய கூடுதல் விபரங்களை பார்க்கலாம்.

OnePlus பிராண்டின் கீழ் நிறுவனம் தனியாக ஒரு புதிய ஒன்பிளஸ் மினி போனை (OnePlus Mini Phone) உருவாக்கிவருகிறது. அதேபோல், OPPO பிராண்டு அதன் நிறுவனத்தின் கீழ் தனியாக ஒரு புதிய ஒப்போ மினி போனை (OPPO Mini Phone) உருவாக்கி வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. மினி ஸ்மார்ட்போன் சாதனங்கள் இப்போது ஒரு புதிய ஸ்மார்ட்போன் சந்தையாக உருவாகி வருகிறது.

புது OnePlus மினி மற்றும் Oppo மினி போன்கள்.. சைஸ்ல சிறுசு தான்.. ஆனா?

ஒன்பிளஸ் மினி ஸ்மார்ட்போன் மற்றும் ஒப்போ மினி ஸ்மார்ட்போன் (OnePlus Mini Smartphone and OPPO Mini Smartphone):

இந்த புதிய சக்தி வாய்ந்த கையடக்க பிரீமியம் மினி ஸ்மார்ட்போன் (compact premium mini smartphones) சந்தையை உருவாக்கி, அதில் முன்னணி நிறுவனங்களாக திகழ்வது சியோமி (Xiaomi) மற்றும் விவோ (Vivo) மட்டும் தான். காரணம் இந்த இரண்டு நிறுவனங்கள் மட்டுமே முதல் மினி வெர்ஷன் ஸ்மார்ட்போன் (mini version smartphone) மாடலை வெளியிட்டுள்ளன.

சமீபத்தில் விவோ நிறுவனம் விவோ எக்ஸ்200 ப்ரோ மினி (Vivo X200 Pro Mini) என்ற போனை வெளியிட்டது. சியோமி 15 (Xiaomi 15) சாதனமும் கூட இந்த வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில், ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் பிராண்டின் மினி போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த போன்கள் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

மினி ஸ்மார்ட்போன் சந்தையில் புது கையடக்க பவர்ஃபுல் மொபைல்கள்:

வதந்திகள் படி, ஒப்போ நிறுவனம் வெளியிடவிருக்கும் புதிய மினி போன் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்8 (OPPO Find X8) வரிசையில் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது. இந்த புதிய மினி போனை ஒப்போ (mini oppo phone) நிறுவனம் 2025-ல் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா (Oppo Find X8 Ultra) போனின் அறிமுகத்துடன் அறிமுகம் செய்யுமென்று கூறப்படுகிறது.

மறுபுறம் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் ஏஸ் (OnePlus Ace series) சீரிஸ் வரிசையின் கீழ் மினி ஒன்பிளஸ் போனை நிறுவனம் 2025 இல் வெளியிடும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய மினி சாதனங்களின் அசல் பெயர் என்னவாக இருக்கும் என்பதில் எந்தவொரு தகவலும் இன்னும் கிடைக்கவில்லை. ஒப்போ மினி (OPPO mini) மற்றும் ஒன்பிளஸ் மினி (OnePlus mini) ஆகிய இரண்டு போன்களும் வெவ்வேறு விதமான வேறுபாட்டை கொண்டிருக்குமென்று கூறப்படுகிறது.

லீக் தகவலின் அடிப்படையில், புதிய ஒன்பிளஸ் மினி ஸ்மார்ட்போன் சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் (Qualcomm SnCapdragon 8 Elite SoC) உடன் வெளிவரும் என்றும், ஒப்போ மினி ஸ்மார்ட்போன் சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 9400 சிலிக்கான் சிப்செட் (MediaTek Dimensity 9400 silicon chipset) உடன் வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மினி போன்கள் இரண்டும் வெவ்வேறு டிசைன் மற்றும் நிறங்களுடன் வெளிவரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Mini Smartphones and Oppo Mini Phones Might Launch Soon In 2025 Check Expecting Specs and Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X