வாடா குட்டி.. 6200mAh பேட்டரி, 80W சார்ஜிங்.. iPhone, Pixelகளை காலி செய்யும் விலை.. OnePlus-ன் புது Mini போன்!
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய "மினி ஸ்மார்ட்போன்" ஒன்றின் மூலம் ஆப்பிளின் ஐபோன் 16ஏ மற்றும் கூகுளின் பிக்சல் 9ஏ ஆகிட இரண்டையுமே தூக்கி சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டது போல் தெரிகிறது. என்ன மாடல்? எப்போது அறிமுகம்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) என்கிற சிறிய ஸ்மார்ட்போனில் மும்முரமாக பணியாற்றி வருகிறது. இது ஒன்பிளஸ்-ன் "சகோதர நிறுவனமான" ஒப்போவின் பைண்ட் எக்ஸ்8எஸ் (Oppo Find X8S) ஸ்மார்ட்போனை போலவே சிறிய 6.3-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் "கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது" என்பது போல ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனில் "நம்பமுடியாத" அளவிலான பேட்டரி கெப்பாசிட்டி இடம்பெறும் என்கிற புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஒரு லேட்டஸ்ட் லீக் தகவலின்படி, ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது 80W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் மிகப்பெரிய 6200mAh பேட்டரியை பேக் செய்யும்.
நினைவூட்டும் வண்ணம் இது ஒன்பிளஸ் 13 மாடலில் இருப்பதை விட பெரிய பேட்டரி ஆகும். ஒன்பிளஸ் 13 மாடலில் 6000mAh பேட்டரி மட்டுமே உள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது ஐபோன் போன்ற வடிவமைப்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இருப்பினும் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனில் எத்தனை கேமராக்கள் இருக்கும் என்கிற விவரங்கள் இல்லை. அதாவது டூயல் ரியர் செட்டப் உடன் வருமா அல்லது ட்ரிபிள் ரியர் செட்டப் உடன் வருமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. பெரும்பாலும் 50எம்பி மெயின் கேமரா இடம்பெறும். இதனுடன் 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50எம்பி டெலிஃபோட்டோ கேமரா (டூயல்) இடம்பெறலாம் அல்லது 8எம்பி அல்ட்ராவைடு உடன் சேர்த்து இன்னொரு கேமரா (ட்ரிபிள்) இடம்பெறலாம்.
மற்ற அம்சங்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படலாம். இதன் டிஸ்பிளே 1.5கே ரெசல்யூஷன் மற்றும் உட்பொதிக்கப்பட்ட ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரலாம். ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது 2025 ஏப்ரல் மாதத்தில், சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலையை பொறுத்தவரை இது ரூ.54,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் பிளாக்ஷிப் டேப்லெட் மாடல் ஆன ஒன்பிளஸ் பேட் ப்ரோ (OnePlus Pad 2) டேப்லெட்டின் அப்கிரேடட் வெர்ஷனையும் உருவாக்கி வருகிறது. அது ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ (OnePlus Pad 2 Pro) என்று அழைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சீனாவின் 3சி சான்றிதழ் தரவுத்தளத்தில் காணப்பட்டுள்ளதால், இது கூடிய விரைவில் சீனாவில் அறிமுகமாகி பின் இந்திய சந்தைக்குள் வரும் என்பது போல் தெரிகிறது.
ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட்டில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சீனாவின் 3சி சான்றிதழ் தரவுத்தளத்தின் வழியாக இது 80W பாஸ்ட் சார்ஜிங் திறனை கொண்டிருக்கும் என்பது தெரியவந்துள்ளது. சமீபத்தில் கீக்பெஞ்ச் (Geekbench) இல் காணப்பட்ட போது, இதன் ப்ராசஸர் மற்றும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் பற்றிய முக்கிய விவரங்களை உறுதிப்படுத்தபட்டது.
கீக்பெஞ்ச்சில் காணப்பட்ட ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான இயக்க முறைமையில் இயங்குகிறது மற்றும் 16ஜிபி ரேம்-ஐ கொண்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய டேப்லெட் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட்டால் இயக்கப்படுகிறது என்பதை முந்தைய அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. இது சிங்கிள்-கோர் சோதனையில் 2633 புள்ளிகளையும், கீக்பெஞ்ச் 6-ன் மல்டி-கோர் சோதனையில் 7779 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோவில் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா இருக்கலாம். ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட் ஆனது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் (ரூ.50,000 - ரூ.60,000 பட்ஜெட்டில்) சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் இந்திய சந்தைக்கும் நிச்சயம் வரும். ஏனென்றால் ஒன்பிளஸ் பேட் 2 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. Photo Courtesy: WHYLAB | https://www.91mobiles.com


Click it and Unblock the Notifications








