பயப்படுறீயா குமாரு.. OnePlus-ன் டெட்ராஃபோபியா.. OnePlus 14 க்கு கும்பிடு.. 3 முக்கிய மாற்றங்களுடன் OnePlus 15!
முதலில்.. "என்னது ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மாடல்-ஆ.. அப்போ ஒன்பிளஸ் 14 (OnePlus 14) மாடலுக்கு என்ன ஆச்சு?" என்று கேட்பவர்களுக்கு சிம்பிள் ஆன ஒரு விளக்கத்தை கொடுத்துவிட்டு.. பிறகு ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் செய்யப்பட உள்ள முக்கியமான மாற்றங்களை / மேம்பாடுகளை பற்றி விரிவாக பேசுவோம்.
ஒன்பிளஸ் 14 க்கு என்ன ஆகிற்று? சில ஆசிய சந்தைகளில் நிலவும் டெட்ராஃபோபியா (Tetraphobia) காரணமாக "4" என்கிற எண்ணை தவிர்த்து, ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது ஒன்பிளஸ் 13 மாடலுக்கு அடுத்தபடியாக ஒன்பிளஸ் 14 மாடலை அறிமுகம் செய்யாமல், நேரடியாக ஒன்பிளஸ் 15 மாடலை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெட்ராஃபோபியா என்றால் என்ன (What is mean Tetraphobia)? டெட்ராஃபோபியா என்றால் நான்காம் எண்ணின் மீதான பயம் அல்லது வெறுப்பு ஆகும். இது முதன்மையாக கிழக்கு ஆசிய கலாச்சாரங்களில், குறிப்பாக சீனா, ஜப்பான், கொரியா மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது. இந்நாடுகளில் உள்ள மொழிகளில் நான்காம் எண்ணுக்கான சொல் ஆனது மரணம் (Death) என்கிற வார்த்தையுடன் மிகவும் ஒத்திருப்பதால் இந்த பயம் உருவாகியுள்ளது.
இந்த பயம் சீன நிறுவனம் ஆன ஒன்பிளஸ்-க்கும் உண்டு. இந்த பயம் - ஒன்பிளஸ் நிறுவனதிடம் இருந்து அடுத்ததாக எதிர்பார்க்கப்படும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 14 மாடலுக்கான பெயர் மாற்றத்தை தூண்டிவிட 99% வாய்ப்புள்ளது. அதாவது ஒன்பிளஸ் 14 என்கிற பெயருக்கு பதிலாக ஒன்பிளஸ் 15 என்கிற பெயருடன் அடுத்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம் (OnePlus 15 Upgrades, Changes Expected)? ஒன்பிளஸ் 15 மாடலில் பெயர் மட்டுமே பெரிய அல்லது முக்கிய மாற்றமாக இருக்காது என்பது போல் தெரிகிறது. டிஸ்பிளே அளவு, கேமரா டிசைன், முக்கியமாக ஹசல்பிளாட் பிராண்டிங்.. ஆகியவற்றில் சில பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது அதன் முன்னோடியை விட குறைந்த ரெசல்யூஷன் உடன் வரும். இது 1.5கே ரெசல்யூஷன் உடன் வரலாம். இப்படி செய்வதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் பணம் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் "வேறு அம்சங்களில்" முதலீடு செய்யப்படலாம். ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே அளவு 6.78-இன்ச் ஆக இருக்கலாம், மேலும் இது நான்கு பக்கங்களிலும் மிகக்குறுகிய பெசல்களைக் கொண்டிருக்கலாம்.
கேமராவை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் கேமரா ஐலேண்ட் வட்டமாக இருக்காது. மேலும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பில் 50எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உட்பட மூன்று ஷூட்டர்கள் இருக்கும்.
எல்லாவற்றை விட முக்கியமான ஒன்பிளஸ் 15 வழியாக முதல் முறையாக, ஒன்பிளஸ் நிறுவனம் அதன் சொந்த இமேஜ் பிராண்டையும் அறிமுகப்படுத்தலாம். இது ஒப்போவின் லுமோவாக (Lumo) இருக்கலாம். அதாவது கடந்த சில ஆண்டுகளாக ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப்களின் பிரதான அம்சமாக இருந்த ஹசல்பிளாட் (Hasselblad) பிராண்டிங் கைவிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த லேட்டஸ்ட் லீக்கின்படி, ஒன்பிளஸ்-ன் வரவிருக்கும் ஃபிளாக்ஷிப் போன் (இவர் ஒன்பிளஸ் 15 என்கிற மாடல் பெயரை குறிப்பிடவில்லை) ஆனது ஒன்பிளஸ் 13டி மாடலை போலவே இருக்கும் என்கிறார்
அதாவது ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது அதன் பக்கவாட்டில் கஸ்டம் பட்டன்கள், ரியர் கேமரா செட்டப்பில் டெலிஃபோட்டோ மேக்ரோ அம்சம் இல்லாமல் பெரிஸ்கோப் சென்சார், 8000mAh க்கும் குறைவான ஆனால் 7,000mAh க்கும் அதிகமான திறன் (அதாவது இரண்டிற்கும் இடையிலான ஒரு கெப்பாசிட்டியை) கொண்ட பேட்டரி ஆகிய அம்சங்களை கொண்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








