ஒன்பிளஸ் நோர்ட் தொடரில் மற்றொரு மாடலா?- OnePlus Nord SE குறித்து வெளியான தகவல்!
ஒன்பிளஸ் நோர்ட் எஸ்இ ஸ்மார்ட்போனானது ஒன்பிளஸ் 9 மாடலோடு அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் மாடல் ஸ்மார்ட்போன்
ஒன்பிளஸ் நிறுவனம் கடந்தாண்டு ஜூலை மாதம் ஒன்பிளஸ் நோர்ட் மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. ஒன்பிளஸ் நோர்ட் மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதையடுத்து ஒன்பிளஸ் நோர்ட் தொடரில் மேலும் ஒரு மாடல் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் எஸ்இ
ஒன்பிளஸ் நோர்ட் தொடரின் கீழ் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் நோர்ட் எஸ்இ என்று அழைக்கப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஆண்ட்ராய்டு சென்ட்ரல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமோலெட் டிஸ்ப்ளே 1080 பிக்சல்
ஆண்ட்ராய்டு சென்ட்ரல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஒன்பிளஸ் நோர்ட் எஸ்இ ஸ்மார்ட்போனானது அமோலெட் டிஸ்ப்ளே 1080 பிக்சல் ரெசல்யூசனோடு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4500 எம்ஏஎச் பேட்டரி
ஒன்பிளஸ் நோர்ட் எஸ்இ ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரியோடு வரும் எனவும் இதில் 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 40 நிமிடங்களில் இந்த ஸ்மார்ட்போனை முழுவதுமாக சார்ஜ் செய்யலாம்.

அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில்
அதோடு ஒன்பிளஸ் எஸ்இ ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக இந்தியா மற்றும் ஐரோப்பாவில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் தற்போதுவரை ஒன்பிளஸ் நோர்ட் எஸ்இ ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

பட்ஜெட் விலையில் அறிமுகமாகும்
ஒன்பிளஸ் நோர்ட் எஸ்இ பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 9 மாடலோடு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் புதிய மாடல் மார்ச் 2021 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

அம்சங்கள், விலை குறித்த விவரங்கள்
ஒன்பிளஸ் நோர்ட் எஸ்இ ஸ்மார்ட்போனின் அம்சங்கள், விலை குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் ஒன்பிளஸ் நோர்ட் எஸ்இ குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications