பட்ஜெட் வாசிகளை குறிவைத்து ரெடியாகும் புதிய OnePlus போன்! என்ன மாடல்? எப்போது அறிமுகம்?

|

ஒன்பிளஸ் நிறுவனம் ரியல்மி ஜிடி நியோ 5 மற்றும் ரெட்மி கே60 ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக புதிய ஒன்பிளஸ் Ace 2 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த OnePlus Ace 2 போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் Ace 2

ஒன்பிளஸ் Ace 2

தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் Ace 2 போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் இந்த ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போன் ஆனது OnePlus 11R எனும் பெயரில் கூட அறிமுகமாகலாம். மேலும் ஆன்லைனில் கசிந்த ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

என்ன தான் 5G கெத்துனு சொன்னாலும்.. பந்தயத்துல ஜெயிக்கிறது குதிரை 4G தான்.! ஏன் தெரியுமா?என்ன தான் 5G கெத்துனு சொன்னாலும்.. பந்தயத்துல ஜெயிக்கிறது குதிரை 4G தான்.! ஏன் தெரியுமா?

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போனில் கேமிங் பயன்பாடுகளுக்குத் தகுந்தபடி குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் வாங்குவோர் கவனத்திற்கு.. என்னென்ன வேணுமோ மொத்தமும் இந்த போனில் இருக்கு!ஸ்மார்ட்போன் வாங்குவோர் கவனத்திற்கு.. என்னென்ன வேணுமோ மொத்தமும் இந்த போனில் இருக்கு!

50எம்பி Sony IMX890 மெயின் கேமரா

50எம்பி Sony IMX890 மெயின் கேமரா

அதேபோல் இந்த ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போன் 50எம்பி Sony IMX890 மெயின் கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவுடன் இந்த ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும். எனவே இந்த போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

அலெர்ட்! மொபைல் போன்களுக்கான புதிய சட்டத்தை அறிவித்த இந்திய அரசு! இப்போ நீங்க என்ன செய்ய வேண்டும்?அலெர்ட்! மொபைல் போன்களுக்கான புதிய சட்டத்தை அறிவித்த இந்திய அரசு! இப்போ நீங்க என்ன செய்ய வேண்டும்?

16எம்பி கேமரா

16எம்பி கேமரா

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

Airtel , Vi பயனர்களே இனி சாதாரண திட்டத்தை தூக்கி போட்டுவிட்டு இத மட்டும் ரீசார்ஜ் பண்ணுங்க: அதிக நன்மைகள்.!Airtel , Vi பயனர்களே இனி சாதாரண திட்டத்தை தூக்கி போட்டுவிட்டு இத மட்டும் ரீசார்ஜ் பண்ணுங்க: அதிக நன்மைகள்.!

6.7-இன்ச் Fluid AMOLED டிஸ்பிளே

6.7-இன்ச் Fluid AMOLED டிஸ்பிளே

ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் Fluid AMOLED டிஸ்பிளே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. Jio-வை கழுவி ஊற்றும் கால்பந்தாட்ட ரசிகர்கள்! ஏன்?இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. Jio-வை கழுவி ஊற்றும் கால்பந்தாட்ட ரசிகர்கள்! ஏன்?

Ace 2 ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போன் 8ஜிபி/12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கருப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சொன்னதை தான் செய்வேன், செய்வதை தான் சொல்வேன்" டொனால்ட் டிரம்ப்பை மீட்டு கெத்து காட்டிய Elon Musk!

100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்

100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்

விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் விலை..

பட்ஜெட் விலை..

குறிப்பாக டூயல் சிம் ஆதரவு, 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
OnePlus launching New budget smartphone in china that could be rebranded as OnePlus 11R in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X