அடிச்சான் பாரு OnePlus! பட்ஜெட் வாசிகளை குஷிப்படுத்தும் விலையில் புதிய 5G Phone!

|

ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் அனைத்து போன் மாடல்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி

இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் OnePlus Nord CE 3 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் கூட பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே ஒரு நல்ல 5ஜி போனை வாங்க விரும்பும் பயனர்கள் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி மாடல் அறிமுகமாகும் வரை காத்திருங்கள்.

இளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய Samsung 5G போன்? ஆன்லைனில் வெளியான முக்கிய அம்சங்கள்.!இளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய Samsung 5G போன்? ஆன்லைனில் வெளியான முக்கிய அம்சங்கள்.!

256ஜிபி ஸ்டோரேஜ்

இப்போது ஆன்லைனில் கசிந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி மாடலின் சில முக்கிய அம்சங்களை பார்ப்போம். அதாவது இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இது வெறும் ஆரம்பம் தான்! சீறிப்பாய காத்திருக்கும் விக்ரம்-எஸ்! இது ஏன் ஸ்பெஷல்?இது வெறும் ஆரம்பம் தான்! சீறிப்பாய காத்திருக்கும் விக்ரம்-எஸ்! இது ஏன் ஸ்பெஷல்?

108எம்பி பிரைமரி கேமரா

108எம்பி பிரைமரி கேமரா

அதேபோல் விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். இதுதவிர பல்வேறு சிறப்பான கேமரா அம்சங்கள் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

விஷயம் ரொம்ப சீரியஸ்! உடனே இந்த Settings-ஐ மாத்துங்க.. இல்லனா உங்க WhatsApp அக்கவுண்ட் - கோயிந்தா தான்!விஷயம் ரொம்ப சீரியஸ்! உடனே இந்த Settings-ஐ மாத்துங்க.. இல்லனா உங்க WhatsApp அக்கவுண்ட் - கோயிந்தா தான்!

16எம்பி கேமரா

அதாவது மற்ற நிறுவனங்களை விட கேமரா விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறது ஒன்பிளஸ் நிறுவனம். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன்.

Realme 10 லுக்க பார்த்து மயங்கிடாதீங்க.! இதில 1 முக்கியமான அம்சம் மிஸ்ஸிங்.! அது என்ன தெரியுமா?Realme 10 லுக்க பார்த்து மயங்கிடாதீங்க.! இதில 1 முக்கியமான அம்சம் மிஸ்ஸிங்.! அது என்ன தெரியுமா?

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் டிஸ்பிளேவைப் பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

இத்தனை நாளா தெரியாம போச்சே! யாருக்கும் தெரியாமல் WhatsApp இல் இதை செய்யலாமா? இனி குஷிதான்!இத்தனை நாளா தெரியாம போச்சே! யாருக்கும் தெரியாமல் WhatsApp இல் இதை செய்யலாமா? இனி குஷிதான்!

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

இதுதவிர 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைரேகை சென்சார் ஆதரவுடன் இந்த ஒன்பிளஸ் போன் அறிமுகம் செய்யப்படும்.

யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!

67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும்67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

ரூ.23,999-விலையில் அறிமுகமாகும்

இணையத்தில் கசிந்த தகவலின்படி ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.23,999-விலையில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஒன்பிளஸ் போன்.

Best Mobiles in India

English summary
OnePlus launching new 5G smartphone in India named Nord CE 3 Priced under Rs 25000: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X