Home
Mobile

அதே டெய்லர் அதே வாடகை.. அவசரமாக OnePlus 15 இந்திய அறிமுகம்.. Snapdragon 8 Elite Gen 5 சிப், Detail Max கேமரா?

ரியல்மி (Realme) மற்றும் ஐக்யூ (iQOO) ஆகிய 2 நிறுவனங்களும் சுற்றி வளைத்துவிட்ட காரணத்தால்.. ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு, அதன் ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மாடலை முன்கூட்டியே இந்தியாவில் அறிமுகம் செய்வதை தவிர வேறு வழியே இல்லை என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது.

ரியல்மி மற்றும் ஐக்யூ ஆகிய இரண்டுமே ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் உடனான அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்த வேகத்தில் - அதே ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் உடன் வரும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனும் விரைவில் அறிமுகம் செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அவசரமாக OnePlus 15 அறிமுகம்.. Snapdragon 8 Elite Gen 5 சிப் காரணம்?

இந்தியாவின் முதல் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 ஸ்மார்ட்போன் ஆக ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்கிற அறிவிப்பு வெளியான வேகத்தில், ஐக்யூ நிறுவனமும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 உடன் வரும் அதன் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்திருந்தது.

இப்போது "இந்த பந்தயத்தில்" ஒன்பிளஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் கொண்டு இயங்கும் ஒன்பிளஸ் 15 விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆக ஜனவரி 2026 வாக்கில் இந்திய சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 15 மாடல் ஆனது 2025 நவம்பர் அல்லது டிசம்பரில் இந்தியாவில் அறிமுகமாகலாம் என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது.

நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது கடந்த அக்டோபர் 2024 இல் சீனாவில் அறிமுகமானது. பின்னர் உலகளாவிய சந்தைக்கான முதல் டீஸர் டிசம்பரில் வந்தது; அதை தொடர்ந்து ஜனவரி 2025 இல் சீனாவிற்கு வெளியே உள்ள பகுதிகளில் (இந்தியா உட்பட) அறிமுகமானது. இம்முறை இந்த வழக்கம் மாற்றப்படுவது நிச்சயம்.

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சில தினங்களுக்கு முன் சீன சமூக ஊடக தளமான வெய்போ (Weibo) வழியாக டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக லீக் செய்யப்பட்டு இருந்த ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் புகைப்படமும், தற்போது ஒன்பிளஸ் சிஇஓ இந்தியா ராபின் லியு காட்சிப்படுத்தி உள்ள ஒன்பிளஸ் 15 மாடலும் "கிட்டத்தட்ட" ஒரே இருக்கிறது.

இதில் இருந்து ஒன்பிளஸ்15 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு சதுர வடிவிலான கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. அதற்குள் ஒரு டேப்லெட் வடிவ கட்-அவுட் மற்றும் இரண்டு வட்ட வடிவ கட்-அவுட்கள் உள்ளன. டேப்லெட் கட்-அவுட்டில் ப்ரைமரி கேமராவும், ஒரு செக்கண்டரி லென்ஸும் இருப்பது போல் தெரிகிறது. மறுபுறம் உள்ள இரண்டு வட்ட வடிவ கட்-அவுட்களிலும் ஒரு ஃபிளாஷ் மற்றும் மற்றொரு லென்ஸ் உள்ளன. மேலும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் இந்த ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் உள்ள 3 கேமராக்களுமே 50 மெகாபிக்சல் சென்சார்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடவே ஒன்பிளஸ் 15 மாடலில் ஹசல்பிளாட் (Hasselblad) பிராண்டட் கேமராக்கள் இடம்பெறவில்லை என்பதையும் வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது. ஒன்பிளஸ் ஆனது ஹசல்பிளாட் உடனான கூட்டாண்மையை முடித்து கொண்டதன் விளைவாக இது நடந்துள்ளது. ஆக ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் அதன் இன்-ஹவுஸ் கேமரா எஞ்சினான டீட்டெயில்மேக்ஸ்-ஐ (DetailMax) பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

ஒன்பிளஸ் 15 இல் எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்கள் மற்றும் இந்திய விலை?
- 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் 1.5கே ஓஎல்இடி டிஸ்பிளே
- 120W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் ஒரு பெரிய 7,000mAh பேட்டரி
-ஆண்ட்ராய்டு 16 (Android 16) ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்சிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) ஆப்ரேட்டிங் சிஸ்டம்
- ரூ.79,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus India CEO Robin Liu Shared First look of OnePlus 15 So India Launch Will Be Very Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X