Home
Mobile

ரூ.20,000 டிஸ்கவுண்ட்.. ஆக.31 வரை நடக்கும் OnePlus Independence Day Sale.. 5 மாடல்கள் மீது முரட்டு ஆபர்!

2024 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சீன பிராண்ட் ஆன ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் இந்திபென்டன்ஸ் டே சேல் (OnePlus Independence Day Sale) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இந்திய இணையதளம் (OnePlus India Website) வழியாக நடக்கும் இந்த விற்பனையின் போது கிடைக்கும் அதே சலுகைகள் அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும் என்று ஒன்பிளஸ் அறிவித்துள்ளது.

இம்மாத இறுதி வரை.. அதாவது ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நடக்கும் ஒன்பிளஸ் இந்திபென்டன்ஸ் டே சேல் விற்பனையின் போது என்னென்ன ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீது.. எவ்வளவு நேரடி தள்ளுபடி கிடைக்கும்? என்னென்ன பேங்க் ஆபர் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

ஆக.31 வரை OnePlus Independence Day Sale.. 5 மாடல்கள் மீது முரட்டு ஆபர்

ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ (ICICI) மற்றும் ஒன்கார்டு (OneCard) பேங்க் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.2,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதே ஸ்மார்ட்போனின் அதிக ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டை வாங்கினால் ரூ.3,000 தள்ளுபடியை பெற முடியும்.

இதேபோல ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) ஸ்மார்ட்போனை வாங்குபவர்கள் மேலே குறிப்பிட்ட பேங்க் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.3,000 உடனடி வங்கி தள்ளுபடியை பெறலாம். இதே ஸ்மார்ட்போனின் லைட் வெர்ஷன் ஆன ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் (OnePlus Nord CE 4 Lite) மாடலை வாங்கினால் ரூ.2,000 பேங்க் கார்டு டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் எந்த நிபந்தனைகளும் அல்லது வங்கி சலுகையும் இல்லாமல், இதை ரூ.59,999 க்கு பெறலாம். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.64,999 ஆகும். ஆனால் இந்த சலுகை மட்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு பின்னர், அதாவது இந்த சலுகை காலாவதியான பிறகு, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் மீது தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளில் ரூ.7,000 நேரடி தள்ளுபடி சலுகை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் மீது ரூ.10,000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும் உள்ளது. கடைசியாக ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) மீது ரூ.1,000 வங்கி தள்ளுபடி கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) மீது பெரும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ரூ.20,000 வங்கி தள்ளுபடி சலுகையுடன் வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.1,39,999 ஆகும். ஆக வங்கி சலுகையின் கீழ் ரூ.1,19,999 க்கு வாங்க கிடைக்கும்.

இது தவிர, ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.8,000 வரை கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸையும் (additional exchange bonus of up to Rs.8,000) பெறலாம். இத மூலம் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.1,11,999 ஆக குறைக்க முடியும்.

ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 1-120Hz டைனமிக் ரெப்ரெஷ் ரேட், 2268 x 2440 பிக்சல்ஸ் உடனான 7.82-இன்ச் 2கே Flexi-fluid LTPO 3.0 AMOLED இன்னர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.வெளிப்புறத்தில் 10-120Hz டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.31-இன்ச் 2கே LTPO 3.0 சூப்பர் ஃப்ளூயிட் AMOLED அவுட்டர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப் உடன் வரும் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் ஆனது 16GB LPDDR5x ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜை 4 ஜிபி, 8 ஜிபி மற்றும் 12 ஜிபி அளவில் விர்ச்சுவல் ரேம் ஆக பயன்படுத்திக்கொள்ள முடியும்

கேமராக்களை பொறுத்தவரை, ஹசல்பிளாட் பிராண்டட் ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 1/1.43-இன்ச் சோனி LYT-T808 "பிக்சல் ஸ்டேக்டு" CMOS சென்சார் கொண்ட 48-மெகாபிக்சல் மெயின் கேமரா உள்ளது. இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (EIS), 85-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் ஒரு எப்/1.7 அபெர்க்ஷர் உடன் வருகிறது.

ஒன்பிளஸ் ஓப்பனில் 64-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளது. அது ஓஐஎஸ், இஐஎஸ், 33.4-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எப்/2.6 அபெர்க்ஷர் உடன் கூடிய OmniVision OV64B சென்சார் உள்ளது. இது 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம் மற்றும் 120x டிஜிட்டல் ஜூம் வரை ஆதரிக்கிறது.

மூன்றாவது கேமராவாக இது 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது; இது மேக்ரோ கேமராவாகவும் வேலை செய்யும். இது இஐஎஸ் உடனான சோனி IMX581 சென்சார், 114-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் உடன் வருகிறது.

ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் இன்னர் டிஸ்பிளேவில், இஐஎஸ் மற்றும் 91-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 20-மெகாபிக்சல் மெயின் கேமராவைப் பெறுவீர்கள். மேலும் இஐஎஸ், 88.5-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 32-மெகாபிக்சல் கேமராவும் உள்ளது. இது செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான கேமராக்களாக பயன்படும். கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் டூயல்-செல் 4,800mAh பேட்டரியை (3295 + 1510mAh) கொண்டுள்ளது. இது 67W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதன் ரீடெயில் பாக்ஸில் 80W சார்ஜருடன் இடம்பெறும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Independence Day Sale Up to Rs 20000 Discount on OnePlus Open OnePlus 12 More Till Aug 31
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X