Home
Mobile

அடிச்சான் பாரு ONEPLUS.. ஆகஸ்ட் 31 வரை.. இந்த 4 லேட்டஸ்ட் மாடல்களும் ரொம்ப கம்மி விலைக்கு கிடைக்கும்!

2023 சுதந்திர தின கொண்டாட்டங்களை குறிவைத்து ஒன்பிளஸ் நிறுவனமானது ஒன்பிளஸ் 'இன்டிபென்டென்ஸ் டே சேல்' என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இதன் கீழ் ஒன்பிளஸின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் மற்றும் நோர்ட் சீரீஸ் மாடல்கள் மீது பல வகையான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது.

ஒன்பிளஸின் இந்த சிறப்பு விற்பனையானது ஏற்கனவே நேரலையில் உள்ளது மற்றும் இது ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையிலாக நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், என்னென்ன ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீது என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்கிற விவரங்கள் இதோ:

ONEPLUS சுதந்திர தின விற்பனை.. லேட்டஸ்ட் மாடல்கள் மீது ஆஃபர்!

ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G): ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Snapdragon 8 Gen 2 SoC) மூலம் இயங்கும் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் இந்தியா (OnePlus India) இணையதளத்தில் ரூ.56,999 (128ஜிபி) க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இருப்பினும், ஐசிஐசிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை கொண்ட பயனர்கள் இஎம்ஐ பரிவர்த்தனைகளில் ரூ.2,000 என்கிற உடனடி வங்கி தள்ளுபடியை பெற முடியும். ஒன்கார்டு (OneCard) பயனர்கள் ஒன்பிளஸ் 11 5ஜி மற்றும் ஒன்பிளஸ் 11 5ஜி ஒடிஸி எடிஷன் மீது ரூ.2,000 உடனடி வங்கி தள்ளுபடியை பெற முடியும்.

ஒருவேளை நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை அமேசானிலிருந்து வாங்குகிறீர்கள் என்றால், ஏசிபிஐ கார்டு வைத்திருப்பவர்களுக்கு சில வங்கி சலுகைகள் கிடைக்கும். முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 11 5ஜி ஆனது 100W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஐஎஸ் உடன் 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 890 கேமரா சென்சார், 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே போன்றவைகளை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G): ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் டோன்ட்-டவுன் வேரியண்ட் ஆன ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஒன்பிளஸ் வலைதளத்தில் ரூ.39,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் ஒன்பிளஸ் ஐசிஐசி வங்கி கிரெடிட் கார்டுகள், இஎம்ஐகள் மற்றும் நெட் பேங்கிங்கின் கீழ் ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும்.

இதையே நீங்கள் அமேசான்.இன் வழியாக வாங்கினால் எஸ்பிஐ கார்டு நான்-இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி (ரூ. 750 வரை) கிடைக்கும். முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் (Snapdragon 8+ Gen 1 SoC) மற்றும் 5000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி (OnePlus Nord 3 5G) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி (OnePlus Nord CE 3 5G): இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே கடந்த மாதம் நடைபெற்ற ஒன்பிளஸ் நோர்ட் சம்மர் வெளியீட்டு நிகழ்வின் போது அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் நோர்ட் சீரீஸ் மாடல்கள் ஆகும்.

ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஆனது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் கிடைக்கும் அதே 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சாரை (50 Megapixel Sony IMX890 Sensor) கொண்டுள்ளது மற்றும் இது டைமன்சிட்டி 9000 சிப்செட் (Dimensity 9000 SoC) மூலம் இயக்கப்படுகிறது.

மறுகையில் உள்ள ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 728ஜி சிப்செட் (Qualcomm Snapdragon 782G SoC) மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது 80W சூப்பர்வூக் (SUPERVOOC) சார்ஜிங் ஆதரவு உடைந்தன 5000mAh பேட்டரியை மற்றும் அமோஎல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைத்தளம் மற்றும் ஒன்பிளஸ் இந்தியாவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ரூ.33,999 க்கு வாங்க கிடைக்கிறது. மறுகையில் உள்ள ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ 26,999 க்கு க்கு வாங்க கிடைக்கிறது.

இருப்பினும் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு இஎம்ஐ பயனர்கள் ஒன்பிளஸ் ஸ்டோர், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்கள் மற்றும் அமேசான் ஆகியவற்றிலிருந்து ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி மாடலை வாங்கினால் ரூ.1,000 உடனடி வங்கி தள்ளுபடியை பெற முடியும். மேலும் ஆகஸ்ட் 4 முதல் 18 வரை ஒன்பிளஸ் நோர்ட் சி3 5ஜி-ஐ வாங்கினால் ரூ.2,000 மதிப்பிலான பலன்களை பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Independence Day Sale Big Offers on Latest Models Including OnePlus 11 Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X