ஸ்மார்ட்போன்களின் தகுதிவாய்ந்த தலைவன் ஒன்ப்ளஸ்.!

ஸ்மார்ட்போன் தொழிற் நிறுவங்களுக்கு இந்தியா சொர்க்க பூமியாக விளங்குகிறது.

By Sharath
|

ஸ்மார்ட்போன் தொழிற் நிறுவங்களுக்கு இந்தியா சொர்க்க பூமியாக விளங்குகிறது. உலகில் ஸ்மார்ட்போன் விற்பனை அதிக அளவில் நடக்கும் நாடாக, யுஎஸ் மற்றும் சீனாவை பின்தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய சந்தையில் தாக்குப்பிடிக்க ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட போட்டி நிகழ்கிறது. ஒரு சிறிய தவறான முடிவுவின் விளைவு, சந்தையில் அவர்களுக்கான இடத்திலிருந்து எளிதில் தூக்கி எறியப்பட்டுவிடுவார்கள் என்பதை நன்கு உணர்த்த நிறுவனங்கள் மிக கவனகமாக போட்டியிடும் நிலை இங்கு உருவாகியுள்ளது. இதனால் தங்களின் தயாரிப்பைப் பிரத்தியேகமாகவும் குறைந்த விலையில் அதிக அம்சங்களுடன் கூடிய சூப்பர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் போட்டியிட்டுக் கொண்டுள்ளது அனைத்து முன்னணி நிறுவனங்களும்.

ஸ்மார்ட்போன்களின் தகுதிவாய்ந்த தலைவன் ஒன்ப்ளஸ்.!

இந்திய ஸ்மார்ட்போன் பயனாளர்கள் புதிய பிரத்தியேக அம்சங்களுடன் கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்களை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். சில பயனாளர்கள் 3 மாதத்திற்கு ஒருமுறை போன்களை மாற்றும் பழக்கத்தினை பழக்கமாகக் கொண்டுள்ளனர். இன்னும் சிலர் நீண்ட நாள் பயன்பாட்டிற்கும் புதிய அப்டேட்களை எதிர்பார்த்துப் பயன்படுத்துகின்றனர். அத்துடன் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சந்தைக்கு எப்படி தங்கள் தயாரிப்புகளை எடுத்துச் செல்வது என்பதையும் தீர்மானிக்க வேண்டியதுள்ளது.

ஒன்ப்ளஸ் பிரீமியம் ஸ்மார்ட்போன்

ஒன்ப்ளஸ் பிரீமியம் ஸ்மார்ட்போன்

ஒன்ப்ளஸ் பிரீமியம் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.சமீப காலங்களில் இந்திய சந்தையை கைப்பற்ற சில நிறுவனங்கள் முயற்சித்திருக்கின்றன, அந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பெயர் ஒன்ப்ளஸ். உலக ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் தொடக்கம், சீனாவில் ஒரு கஃபேயில் தொடங்கியது என்று சொன்னால் நம்புவீர்களா. 2014 இல் அதன் முதல் தயாரிப்பு அறிமுகப்படுத்திய ஒன்ப்ளஸ், இப்போது ஆப்பிள், சாம்சங், ஹவாய், போன்ற பெரிய நிறுவனங்களுக்குப் போட்டியாக திகழ்கிறது. குறிப்பாக, ஒன்ப்ளஸ் Q4 இல் 48% சந்தைப் பங்கை கைப்பற்றியுள்ளது. IDC இன் காலாண்டில் மொபைல் போன் டிராக்கர் Q4 2017 பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் வேகமாக வளர்ந்து வரும் பிராண்ட் என்ற பெயரை ஒன்ப்ளஸ் நிறுவனம் வாங்கியது. கடந்த 3 ஆண்டுகளில் இந்திய சந்தையில் நுழைந்தது, ஒன்ப்ளஸ் இன் வளர்ச்சி 2017 இல் ஒன்ப்ளஸ் 5டி உடன் நின்றுவிடவில்லை.

ஒன்ப்ளஸ் சாதனை

ஒன்ப்ளஸ் சாதனை

ஒன்ப்ளஸ் நிறுவனம் சமீபத்திய ஒன்ப்ளஸ் 6 உடன் தனது புதிய பெஞ்ச்மார்க் ஒன்றை உருவாக்கியது. Q2 க்கான கவுண்டர் பாயிண்ட் டேட்டாவை பொறுத்தவரை, ஒன்ப்ளஸ் 6 இந்த ஆண்டின் பிரீமியம் பிரிவில் சிறந்த விற்பனையான மாடல் என்பதுடன், முன்னணி நிறுவனங்களான சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தைத் தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒன்ப்ளஸ் க்கு பெரிய சாதனை. ஒன்ப்ளஸ் நிறுவனம் தயாரிப்பு பட்டியலில் எட்டு ஸ்மார்ட்போன்கள் மட்டுமே தயாரித்துள்ளது. ஆனால் ஒவ்வொரு தயாரிப்பும் மற்ற ஒரு மாடலும் வேறுபாட்டுடன் இருப்பது ஒன்ப்ளஸ் ற்கு ஒரு புதிய அத்தியாயம் சேர்க்கிறது. ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோ மற்றும் அதன் சாதனைகளை பார்க்கலாம்.

"பிலக்ஷிப் கில்லர்" ஒன்ப்ளஸ்

முதல் "பிலக்ஷிப் கில்லர்" ஒன்ப்ளஸ் ஒன் ஸ்மார்ட்போன் தான் ஒன்ப்ளஸ் பயணத்தின் தொடக்கமாக இருந்தது. ஒரு முதன்மை ஸ்மார்ட்போன் செயல்திறனை அனுபவிக்க நீங்கள் ஷெல் போட வேண்டிய அவசியம் இல்லை என்று ஒரு தெளிவான செய்தி கொடுத்தது ஒன்ப்ளஸ் நிறுவனம். பின்னர் வந்த ஒவ்வொரு ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்னிலும் ஏதாவது புதிய மாற்றங்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்ப்ளஸ் 2015 ஆம் ஆண்டில் தனது ஒன்ப்ளஸ் 2 ஐ முதல் டைப்-சி போர்ட்டுடன் அறிமுகப்படுத்தியது. படிப்படியாக இந்த நாள் வரை நிலையான ஒரு வளர்ச்சியுடன் எளிதாகச் சந்தையில் ஒரு மிகுத்த இடத்தைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் ஒன்ப்ளஸ் தொடக்கத்தில் தனது பிராண்டின் வெற்றியை நிலைநாட்டப் பயப்படாமல் பல பரிசோதனைகளை மேற்கொண்டது என்பதையும் நினைவுகூரவேண்டும்.

முதன்மை பிலக்ஷிப் சிப் திறனுடைய போன்

முதன்மை பிலக்ஷிப் சிப் திறனுடைய போன்

சிறந்த தயாரிப்புடன் மிகக் குறைந்த விலையில் பிலக்ஷிப் விற்பனையை, ஸ்மார்ட்போன் சந்தைக்கு அறிமுகப்படுத்தியது ஒன்ப்ளஸ் நிறுவனம். முன்னணி நிறுவனங்களால் முடியாத போதும் கூட, ஒன்ப்ளஸ் அதன் ஸ்மார்ட்போன்களில் முதன்மை பிலக்ஷிப் சிப்செட்டுகளுடன் சிறந்த செயல் திறனுடைய போன்களை சந்தைக்குக் குறைந்த விலையில் அறிமுகம் செய்தது. நிதிநிலை ஸ்மார்ட்போன் வரிசையில் ஒன்ப்ளஸ் எக்ஸ் இல் அமோல்ட் காட்சி திரையை வழங்கியது, சாம்சங் இன் அல்ட்ரா பிரீமியம் கேலக்ஸி எஸ் ஸ்மார்ட்போன் வரம்பில் மட்டுமே இந்தத் திரை இணைக்கப்பட்டிருந்தது.

ஒன்ப்ளஸ் 3 பிரீமியம் சிறந்த செயல்திறனுடைய உலோக வடிவமைப்பு மற்றும் புதிய 'டாஷ்' சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது, இன்று வரை சிறந்த வேகமான சார்ஜிங் டெக் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்ப்ளஸ் 3 மற்றும் 3T இல் முதன்மை வகுப்பு கேமராக்களை அறிமுகப்படுத்தியது ஒன்ப்ளஸ் நிறுவனம்.

ஒன்ப்ளஸ் 5 மற்றும் 5T

ஒன்ப்ளஸ் 5 மற்றும் 5T

ஒன்ப்ளஸ் 5 மற்றும் 5T உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றது. ஒன்ப்ளஸ் 5 மற்றும் 5T இரட்டை லென்ஸ் கேமரா அமைப்புடன் கூடிய புதிய பெரிய காட்சி வடிவமைப்பு திரையுடன் தன்னை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கடந்த ஆண்டு ஒன்ப்ளஸ் தயாரிப்பிற்காக காத்திருந்தது ரசிகர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் மட்டும் அல்ல, அனைத்துப் பிரிவுகளின் முன்னணி பிராண்டுகளான ஐனாக்ஸ், சோமாட்டோ, ஹெல்த்கார்ட் போன்ற முதன்மையான பிராண்டுகள் தங்களின் பாராட்டுகளை தெரிவித்தது. அவர்களுடன் கைகோர்த்து, சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற ஊடக சேனல்களில் ஒன்ப்ளஸ் பற்றிய விளம்பரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

நிறுவனர் பீட் லாவ்

நிறுவனர் பீட் லாவ்

ஒன்ப்ளஸ் அடுத்த நிலை விஷயங்களை 2018ற்கு வேகமாக எடுத்துச் சென்றது, ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் வெளியாகிவிட்டது. அதீத செயல்திறன் மற்றும் புதிய அம்சங்களால் உருவான ஸ்மார்ட்போன்ககளை வடிவமைக்க வேண்டும் என்று ஒன்ப்ளஸ் முடிவு செய்தது. தனது R & D பிரிவில் FSE (ஃபாஸ்ட், ஸ்டேபிள், எபிஷியன்ட்) அர்ப்பணிக்கப்பட்ட குழு ஒன்றை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பீட் லாவ் மேற்பார்வையில் அமைத்தது. நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளுக்கு அதிகபட்ச செயல்பாட்டை வழங்கி இருக்கிறது.

ஒன்ப்ளஸ் 6

ஒன்ப்ளஸ் 6

நாம் ஒன்ப்ளஸ் 6 ஐ மதிப்பாய்வு செய்துவிட்டோம், அது அதன் விலைக் பட்டியலில் மிகச் சக்திவாய்ந்த மற்றும் செயல்திறனுடைய ஸ்மார்ட்போன் என்று சொல்லலாம். ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்ப்ளஸ் ஒரு தகுதி வாய்ந்த போட்டியாளராகவும், இந்திய ஸ்மார்ட்போன் பிரதேசத்தில் ஒரு மறுக்க முடியாத தலைவனாக திகழ்கிறது என்றே சொல்லலாம்.

ஒன்ப்ளஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க ஒன்ப்ளஸ் நிறுவனம் பல சுவாரசிய முயற்சிகளக்கை மேற்கொண்டே இருக்கிறது. ஒன்ப்ளஸ் நிறுவனம் நிறுவனர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்ததுடன் ஒன்ப்ளஸ் பாப அப் ஸ்டோர்களுக்கு வடிகளயாளர்கள் நேரில் சென்று நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை உபயோகித்து வாங்கிக்கொள்ளும் வசதியை நேரடியாகச் செய்தது.

ஸ்பெஷல் எடிஷன் ஒன்ப்ளஸ்

ஸ்பெஷல் எடிஷன் ஒன்ப்ளஸ்

உலக வரலாற்றில் முதல் முறையாக ஒன்ப்ளஸ் டிஸ்னியுடன் கூட்டணி வைத்துக்கொண்டது. ஒன்ப்ளஸ் நிறுவனம் முதலில் ஸ்டார் வார்ஸ் எடிஷன் ஒன்ப்ளஸ் 5T அறிமுகம் செய்தது. தற்பொழுது ஒன்ப்ளஸ் 6 மார்வெல் அவென்ஜர்ஸ் எடிஷன் ஐ வெளியிட்டு இருக்கிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் போன்கள் ஒன்ப்ளஸ் ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. வரும் காலங்களிலும் ஒன்ப்ளஸ் ரசிகர்களுக்குப் பல சுவாரசிய அனுபவங்களைத் தனது அனைத்து தயாரிப்பிலும் வாரி இறைக்கும் என்று உறுதியுடன் கூறுகிறது ஒன்ப்ளஸ் நிறுவனம்.

Best Mobiles in India

English summary
OnePlus: From a worthy competitor to an undisputed leader : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X