குறுக்க போயிடாதீங்க சார்.. OnePlus புது T சீரீஸ் போன்.. 8000mAh பேட்டரி, Snapdragon 8 Gen 5, 100W சார்ஜிங்!
சில வாரங்களுக்கு முன்பு, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Gen 5) கொண்டு இயங்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப்போவதாக ஒன்பிளஸ் (OnePlus) உறுதிப்படுத்தி இருந்தது. ஆரம்பத்தில், இது தற்காலிகமாக ஒன்பிளஸ் டர்போ (OnePlus Turbo) என்று அழைக்கப்பட்டது.
பின்னர் ஆன்லைனில் லீக் ஆன ஒரு ரீடெயில் பாக்ஸ் புகைபடம் ஒன்று - இது ஒன்பிளஸ் ஏஸ் 6 ப்ரோ மேக்ஸ் (OnePlus Ace 6 Pro Max) என்று அழைக்கப்படும் என்று பரிந்துரைத்தது. இருப்பினும், ஒன்பிளஸின் அதிகாரப்பூர்வ ஃபேன் கிளப் ஆனது ஒன்பிளஸ் ஏஸ் 6 ப்ரோ மேக்ஸ் என்கிற பெயரில் எந்த ஸ்மார்ட்போனும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு பதிலாக ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் உடன் வரும் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஒன்பிளஸ் டி சீரீஸின் கீழ் அறிமுகமாகும் என்று, அது ஒன்பிளஸ் எஸ் 6டி (OnePlus Ace 6T) என்று அழைக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் (Tipster Digital Chat Station) கூற்றுப்படி, வரவிருக்கும் ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன் ஆனது ஒன்பிளஸ் நிறுவனத்தின் கிளாசிக் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ஒன்பிளஸ் 6டி மாடலின் டிஎன்ஏ-வை (OnePlus 6T DNA) பெறும்.
அதாவது ஹை ரெஃப்ரெஷ் ரேட், மிக மென்மையான பெர்ஃபார்மென்ஸ், மிக வேகமான பிங்கர் பிரிண்ட் அன்லாக்கிங் , ஸ்னாப்டிராகன் 8-சீரீஸ் பிளாக்ஷிப் சிப்செட் மற்றும் அதன் அற்புதமான எலக்ட்ரிக் பர்பிள் பினிஷ் என ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் பிரபலமான முக்கிய அம்சங்கள் ஒன்பிளஸ் ஏஸ் 6டி மாடலில் இடம்பெறலாம்.
ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இதுவரை அறிக்கைகளின்படி, டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போனில் 1.5 கே ரெசல்யூஷன் மற்றும் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.
கேமராக்களை பொறுத்தவரை ஒத்து 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் 50-மெகாபிக்சல் + 8-மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப்பை பெறலாம். பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன் ஆனது 100W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் ஒரு பெரிய 8000mAh பேட்டரியை பேக் செய்யலாம்.
ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட கலர்ஓஎஸ்16 உடன் அறிமுகம் செய்யப்படலாம். கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது மெட்டல் மிடில் ஃபிரேம், அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், எக்ஸ்-ஆக்சிஸ் நேரியல் மோட்டார், டூயல் ஸ்பீக்கர்ஸ் மற்றும் என்எப்சி ஆதரவு ஆகியவைகளுடன் வரலாம்.
ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு வரையிலாக ஒன்பிளஸ் நிறுவனம் அதன் டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்து வந்தது. ஆனால் கடைசியாக சீனாவில் ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஆக அறிமுகமான மாடல் மற்ற சந்தைகளில் ஒன்பிளஸ் 13எஸ் ஆக வெளியானது.
ஆக ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன் ஆனது அதே பெயரின் கீழ் இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு வரவில்லை என்றாலும், அதே அம்சங்களுடன் ஒரு ரீபிராண்டட் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் ஆக மற்ற சந்தைகளுக்கு வர வாய்ப்பு உள்ளது. இது வழக்கம் போல நோர்ட் சீரீஸின் அறிமுகம் செய்யப்படுமா அல்லது ஒரு ஸ்பெஷல் எடிஷன் ஆக வருமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும். லான்ச் டைம்லைன் (Launch Timeline) மற்றும் விலை குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை.


Click it and Unblock the Notifications








