Home
Mobile

இந்த ஒரு வார்த்தைக்கு தானே காத்திருக்கோம்.. OnePlus Fold அறிமுக தேதி, இந்திய விலை நிர்ணயம்!

வழக்கம் போல இந்தாண்டும் கூட, ஒன்பிளஸ் 11-க்கு (OnePlus 11) அடுத்தபடியாக வரும் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மீதே அதிக எதிர்பார்ப்பு இருக்கிறதென்று நீங்கள் நினைத்தால், அது தவறு. இந்த 2023 ஆம் ஆண்டில் ஒன்பிளஸிடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் ஃபோல்ட் (OnePlus Fold) உள்ளது!

அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வண்ணம், வரவிருக்கும் ஒன்பிளஸ் ஃபோல்ட் பற்றிய 2 முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒன்று - ஒன்பிளஸ் ஃபோல்ட்டின் லான்ச் டைம்லைன் (Launch timeline); இரண்டாவது - ஒன்பிளஸ் ஃ போல்ட்டின் இந்திய விலை நிர்ணயம் (Price Details).

OnePlus Fold அறிமுக தேதி, இந்திய விலை நிர்ணயம்!

சாம்சங் (Samsung) மற்றும் மோட்டோரோலா (Motorola) ஆகிய இரண்டுமே கூடிய விரைவில் தத்தம் புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளன. அதாவது கேலக்ஸி இஸட் (Galaxy Z) மற்றும் மோட்டோ ரேஸர் (Moto Razr) சீரீஸின் கீழ் அடுத்த தலைமுறை ஃபோல்டபிள் போன்களை அறிமுகம் செய்யவுள்ளன.

இருப்பினும் பெரும்பாலானோரின் கவனம் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஃபோல்ட் மீதே உள்ளது. இதற்கிடையில் தான் டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் (Tipster Abhishek Yadav) வழியாக ஒன்பிளஸ் ஃபோல்ட் ஸ்மார்ட்போன் சரியாக எப்போது அறிமுகமாகும் என்கிற லான்ச் டைம்லைன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் ஃபோல்ட் அறிமுக தேதி: கிடைக்கப்பெற்ற தகவலின்படி ஒன்பிளஸ் ஃபோல்ட் வருகிற ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்கு முன் அறிமுகமாகி விடும். அதாவது எப்படி பார்த்தாலும் இது ஆகஸ்ட் 2023ல் அறிமுகம் செய்யப்பட்டு விடும். இதன் மூலம் ஒன்பிளஸ் ஃபோல்ட் ஆனது சாம்சங், மோட்டோவின் ஃபோல்டபிள் போன்களுக்கு கடும் போட்டியாக இருக்க போகிறது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.

ஒன்பிளஸ் ஃபோல்ட்டின் அம்சங்களை பொறுத்தவரை தெளிவான விவரங்கள் இல்லை, இருப்பினும் இதில் சில அம்சங்களை உறுதியாக எதிர்பார்க்கலாம். முதலாவதாக, ஒன்பிளஸ் 11 5ஜி மற்றும் ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி போன்ற போன்களில் உள்ள ஹாசல்பிளாட் கேமராக்களை (Hasselblad cameras) ஒன்பிளஸ் ஃபோல்ட்டிலும் எதிர்பார்க்கலாம்.

மேலும், ஒன்பிளஸ் நிறுவனமானது அதன் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்காக குவால்காம் (Qualcomm) நிறுவனத்துடன் நெருக்கமாக வேலை செய்து வருவதால், ஒன்பிளஸ் ஃபோல்ட்டில் நாம் அடுத்த ஜென் ஸ்னாப்டிராகன் எஸ்ஒசி-ஐ எதிர்பார்க்கலாம். அதாவது இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்டை (Snapdragon 8 Gen 2) பேக் செய்யலாம்.

இதுதவிர்த்து ஒன்பிளஸ் ஃபோல்ட்டில் நல்ல ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் (Fast Charging Technology), அதன் பெரும்பாலான சமீபத்திய ஸ்மார்ட்போன்களை போலவே 5ஜி கனெக்டிவிட்டிக்கான (5G Connectivity) ஆதரவு வன்பொருள் அடிப்படையில் நல்ல மேம்பாடுகள், போட்டியாளர்களை காலி செய்யும் அளவிலான குறைந்தபட்சம் விலை நிர்ணயம் போன்றவைகளையும் எதிர்பார்க்கலாம்.

ஒன்பிளஸ் ஃபோல்ட் விலை: கடந்த சில ஆண்டுகளாகவே, ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம் அதிகமாகி கொண்டே போகிறது. இருப்பினும் அவைகள் சாம்சங்கின் ஃபிளாக்ஷிப்களை விட அதிகமாக இல்லை. இதெல்லாம் வைத்து பார்க்கும்போது போது ஒன்பிளஸ் ஃபோல்டின் விலை சுமார் ரூ. 1 லட்சமாக இருக்கலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus First Foldable Smartphone OnePlus Fold Launch Date Specifications Price in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X