Home
Mobile

ஆர்டர் அள்ளுது.. OnePlus-ன் முதல் மினி ஸ்மார்ட்போனின் மீது திடீர் விலை குறைப்பு.. எவ்வளவு? என்ன மாடல்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் முதல் காம்பாக்ட் பிளாக்ஷிப் (மினி) ஸ்மார்ட்போன் ஆக அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட விலை நிர்ணயம் ஆனது ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும், பிரபல இகாமர்ஸ் வலைத்தளத்திலும் பிரதிபலிக்கிறது

எவ்வளவு விலை குறைக்கப்பட்டுள்ளது? ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் மீது .ரூ.4,000 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்த போன் ரூ.54,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் தற்போது ரூ.4,000 தள்ளுபடியுடன் ரூ.50,999 க்கு விற்கப்படுகிறது. இதை கேஷ்பேக் அல்லது நோ காஸ்ட் இஎம்ஐ போன்ற சலுகைகளுடன் இணைத்தால் ரூ.50,000 க்கும் குறைவான விலையில் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

OnePlus-ன் முதல் மினி ஸ்மார்ட்போனின் மீது திடீர் விலை குறைப்பு!

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் மீதான இந்த விலைக்குறைப்பு தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்பது தெளிவாக தெரியவில்லை, ஆனால் நீங்கள் ஒரு நல்ல ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்று காத்திருந்தால், இதுவே அதற்கான சரியான நேரமாக இருக்கலாம். ந்த புதிய விலை சரக்குகளை காலி செய்ய அல்லது விற்பனையை அதிகரிக்க ஒரு வழியாக கூட இருக்கலாம். எப்படியிருந்தாலும், இது லாபகரமான ஒரு சலுகை என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளே
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- 2,160Hz PWM டிம்மிங் ரேட்
- Aqua Touch 2.0 தொழில்நுட்பம்
- க்ளோவ் மோட் (இது பயனர்கள் ஈரமான அல்லது கையுறை அணிந்த கைகளால் ஸ்மார்ட்போனை இயக்க உதவும்)

- 12ஜிபி LPDDR5X ரேம்
- 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15 ஓஎஸ்

-டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார்
- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு)

- 5850mAh பேட்டரி
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 6.0, NavIC உடன் கூடிய GPS, NFC மற்றும் USB Type-C போர்ட்
- அளவீட்டில் 150.8×71.7×8.2மிமீ
-எடையில் 185 கிராம்

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் கஸ்டமைஸ் செய்யக்கூடிய பிளஸ் கீ உள்ளது: இதை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் ரிங், வைப்ரேட் மற்றும் சைலண்ட் மோடுகளுக்கு இடையில் மாறலாம். கேமராவை திறப்பது, ஸ்க்ரீனில் உள்ள டெக்ஸ்ட்-ஐ மொழிபெயர்ப்பது அல்லது ஃப்ளாஷ்லைட்டை இயக்குவது போன்ற குவிக் அக்சஸ்-களுக்கும் இதை கஸ்டமைஸ் செய்யலாம். இதைக்கொண்டு AI Plus Mind Space-ஐயும் தொடங்க முடியும்.

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் உள்ள மைண்ட் ஸ்பேஸ்-ஐ பயன்படுத்தி கட்டுரைகள், புகைப்படங்கள், சாட்கள் மற்றும் அட்டவணைகள் போன்ற தகவல்களை ஒரே இடத்தில் சேமித்து, அவற்றை எளிதாக நேவிகேட் செய்யலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் AI Detail Boost, AI Unblur, AI Reflection Eraser, AI Reframe மற்றும் பல ஏஐ-ஆதரவு இமேஜிங் டூல்களும் உள்ளன. AI Translation, AI VoiceScribe, AI Call Assistant, AI Search, அத்துடன் Google இன் Circle to Search அம்சம் மற்றும் Google Gemini போன்ற ஏஐ அம்சங்களுக்கான ஆதரவும் இதில் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus First Compact Mini Smartphone OnePlus 13s gets Rs 4000 price cut in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X