OnePlus தீபாவளி சரவெடி..ரூ.9,000 ஃபெஸ்டிவ் டிஸ்கவுண்ட்.. இதுபோக பேங்க் டிஸ்கவுண்ட்.. எந்தெந்த மாடல்கள்?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒன்பிளஸ் நிறுவனமானது, ஒன்பிளஸ் ஃபெஸ்டிவ் சேல் 2025 (OnePlus Festive Sale 2025) என்னும் சிறப்பு விற்பனையில் அதனுடை ஸ்மார்ட்போன்கள் முதல் இயர்பட்ஸ்கள் வரையில் தள்ளுபடி விலையில் கொடுக்கிறது. அதிகபட்சம் ரூ.9,000 வரை ஃபெஸ்டிவ் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மேலும், பேங்க் டிஸ்கவுண்ட், நோ காஸ்ட் ஈஎம்ஐ போன்ற சலுகைகளும் கிடைக்கின்றன. எந்தெந்த மாடல்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ் 13எஸ் ஃபெஸ்டிவ் சேல் ஆஃபர் (OnePlus 13s Festive Sale Offer): இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் எம்ஆர்பி விலை ரூ.57,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.7,000 ஃபெஸ்டிவ் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.3,250 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மேலும், 6 மாதங்களுக்கான நோ காஸ்ட் ஈஎம்ஐ கிடைக்கிறது. ரூ.47,749 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

ஒன்பிளஸ் 13ஆர் ஃபெஸ்டிவ் சேல் ஆஃபர் (OnePlus 13R Festive Sale Offer): இந்த ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டுக்கு ரூ.6,000 ஃபெஸ்டிவ் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் வேரியண்ட்டுக்கு ரூ.4,000 ஃபெஸ்டிவ் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரூ.2,250 மதிப்பில் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. 6 மாதங்களுக்கு நோ காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது. ரூ.36,749 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 ஃபெஸ்டிவ் சேல் ஆஃபர் (OnePlus Nord CE5 Festive Sale Offer): இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் எம்ஆர்பி விலை ரூ.24,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதேபோல 3 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது. ரூ.22,999 ஆரம்ப விலைக்கு வாங்கி கொள்ளலாம்.
ஒன்பிளஸ் 13 ஃபெஸ்டிவ் சேல் ஆஃபர் (OnePlus 13 Festive Sale Offer): இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை (எம்ஆர்பி) ரூ.72,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.9,000 ஃபெஸ்டிவ் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதுபோக ரூ.4,250 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.59,749 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த மாடலுக்கும் 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது.
ஒன்பிளஸ் நோர்ட் 5 ஃபெஸ்டிவ் சேல் ஆஃபர் (OnePlus Nord 5 Festive Sale Offer): இந்த நோர்ட் ஸ்மார்ட்போனில் ஆரம்ப விலை (எம்ஆர்பி) ரூ.34,999ஆக இருக்கிறது. இப்போது, ஃபெஸ்டிவ் சேலில் ரூ.3,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மேலும், ரூ.2,000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த மாடலுக்கு 3 மாதங்களுக்கான நோ காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது. ரூ.29,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.
ஒன்பிளஸ் பேட் 3 ஃபெஸ்டிவ் சேல் ஆஃபர் (OnePlus Pad 3 Festive Sale Offer): இந்த டேப்லெட் மாடலின் ஆரம்ப விலை (எம்ஆர்பி) ரூ.47,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.5,250 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதேபோல 12 மாதங்களுக்கு நோ காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது. ஆகவே, ரூ.42,749 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ள முடியும்.
ஒன்பிளஸ் ஃபெஸ்டிவ் சேல் ஆஃபர் (OnePlus Nord Buds 3r Festive Sale Offer): இந்த இயர்பட்ஸ் மாடலின் எம்ஆர்பி விலை ரூ.1,699ஆக இருக்கிறது. ரூ.100 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.1,599 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இதுபோக ஃபெஸ்டிவ் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. பேங்க் டிஸ்கவுண்ட்டை ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகள் மூலம் பெறலாம். ஒன்பிளஸ் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








