OnePlus-இன் தீபாவளி.. அடிமட்ட விலைக்கு Nord மாடல்கள்.. அடிச்சு தூக்க போகுது விற்பனை.. எந்தெந்த மாடல்கள்?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒன்பிளஸ் தீபாவளி விற்பனை 2024 (OnePlus Diwali Sale 2024) அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஒன்பிளஸ் நோர்ட் சீரிஸ் (OnePlus Nord Series) பிரியர்களை அறக்க பறக்க செய்யும்படியான டிஸ்கவுண்ட் பல்வேறு மாடல்களுக்கு கொடுக்கப்படுகிறது. செப்டம்பர் 26ஆம் தேதி முதல் இந்த விற்பனை தொடங்க இருக்கிறது. அமேசான் இன் (Amazon.in), ஒன்பிளஸ்.இன் (OnePlus.in) ஆகிய தளங்களில் பின்வரும் ஸ்மார்ட்போன்களை டிஸ்கவுண்ட் விலையில் வாங்கி கொள்ளலாம். இந்த விற்பனை குறித்த முழு விவரங்கள் இதோ.
ஒன்பிளஸ் நோர்ட் 4 அம்சங்கள், விலை (OnePlus Nord 4 Specifications Price): இந்த நோர்ட் போனில் 6.74 இன்ச் (2772 × 1240 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2150 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் வருகிறது. ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 (Oxygen OS 14), ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7பிளஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7+ Gen 3 4nm) வருகிறது. சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ வருகிறது. இந்த செல்பீயில் சாம்சங் சென்சார் வருகிறது. 100W சார்ஜிங் மற்றும் 5500mAh பேட்டரி வருகிறது.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,999ஆக இருந்தது. இப்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.2000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட், 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ வருகிறது. அதேபோல 128 ஜிபி மாடலுக்கு ரூ.2000 மதிப்பிலும் 256 ஜிபி மாடலுக்கு ரூ.3000 மதிப்பிலும் ஸ்பெஷல் விலை கூப்பன்கள் வருகிறது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 அம்சங்கள், விலை (OnePlus Nord CE4 Specifications Price): இந்த சிஇ4 மாடலில் 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 1100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. முந்தைய மாடலை போலவே ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் ஆக்ஸிஜன் 14 ஓஎஸ் வருகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது. சோனி எல்ஒய்டி 600 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 5500mAh பேட்டரி, 100W சூப்பர்வூக் சார்ஜிங் வருகிறது.
இந்த நோர்ட் சிஇ4 போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999 பட்ஜெட்டில் இருந்தது. இப்போது, தீபாவளி பண்டிகை காரணமாக ரூ.1,500 குறுகிய கால விலை குறைப்பு மற்றும் ரூ,1,500 பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. அதேபோல ரூ.1,500 வரையில் நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் அம்சங்கள், விலை (OnePlus Nord CE4 Lite Specifications Price): இந்த போனில் அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மற்றும் 80W சார்ஜிங் வருகிறது. 5500mAh பேட்டரி உள்ளது. 128 ஜிபி மாடலின் விலை ரூ.19,999ஆக இருக்கிறது. ரூ.2000 பேங்க் மற்றும் ரூ.1000 கூப்பன் டிஸ்கவுண்ட் வருகிறது.


Click it and Unblock the Notifications