Home
Mobile

திணற வைக்கும் தீபாவளி ஆஃபர்.. பழசு புதுசுனு பார்க்காம.. 9 OnePlus போன்கள் மீது முரட்டு தள்ளுபடி.. இதோ லிஸ்ட்!

கடந்த அக்டோபரில் நடைபெற்ற நவராத்திரி பண்டிகை கால விற்பனைகளை போலவே, இந்த நவம்பர் மாதமும் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு விற்பனைகளால் சூடுபிடித்துள்ளது. ஒருவேளை நீங்கள் ஒன்பிளஸ் (OnePlus) ஸ்மார்ட்போன்களின் மீதான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை தேடினால்.. இதுவே அதற்கான சரியான நேரம்!

ஏனென்றால் ஒன்பிளஸ் நிறுவனமானது, ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மாட்டிவிகள் உட்பட அதன் பல தயாரிப்புகளின் மீது சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் 2 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ள இந்த சிறப்பு விற்பனையானது வருகிற நவம்பர் 10 வரை நடக்கவுள்ளது.

பழசு புதுசுனு பார்க்காம.. 9 OnePlus போன்கள் மீது முரட்டு தள்ளுபடி!

எனவே நீங்களொரு புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டு இருந்தால், இதுவே அதற்கான சரியான நேரமாக இருக்கும். ஒன்பிளஸின் இந்த தீபாவளி சலுகையின்கீழ் (OnePlus Diwali Offer 2023), எந்தெந்த மாடல்கள் மீது.. என்னென்ன சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

இந்த ஆண்டில், ஒன்பிளஸ் நிறுவனம் பல்வேறு வகையான நோர்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அவைகளில் ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி (OnePlus Nord 3 5G) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி (OnePlus Nord CE 3 5G) ஆகிய 2 மாடல்களும், தற்போது தள்ளுபடி விலையில் வாங்க வழங்குகின்றன.

பழசு புதுசுனு பார்க்காம.. 9 OnePlus போன்கள் மீது முரட்டு தள்ளுபடி!

ஒன்பிளஸின் தீபாவளி பண்டிகை கால சலுகையின் ஒரு பகுதியாக, ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன் மீது ரூ.3000 இன்ஸ்டன்ட் பேங்க் ஆபர் கிடைக்கிறது. கூடுதலாக ரூ.3,000 சிறப்பு விலை கூப்பன் தள்ளுபடியும் கிடைக்கிறது. இது தவிர, 6 மாதங்கள் வரையிலானநோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் அணுக கிடைக்கிறது.

அடுத்ததாக உள்ள ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 மீது ரூ.2,000 இன்ஸ்டன்ட் பேங்க் ஆபர் மற்றும் ரூ.2,500 சிறப்பு விலை கூப்பன் தள்ளுபடி கிடைக்கிறது. ஒருவேளை நீங்கள் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G) அல்லது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் மாடல்களை வாங்க விரும்பினால்.. அவைகளின் மீதும் தள்ளுபடி கிடைக்கிறது.

பழசு புதுசுனு பார்க்காம.. 9 OnePlus போன்கள் மீது முரட்டு தள்ளுபடி!

மேற்கண்ட 2 நோர்ட் சீரிஸ் மாடல்கள் மீதும் ரூ.1,500 வங்கி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் (OnePlus Nord CE 2 Lite) ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 3 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பம் அணுக கிடைக்கும்.

மேற்கண்ட சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளானது, அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்கள் மற்றும் ஒன்பிளஸ்.இன் வலைத்தளம் (oneplus.in Website) ஆகியவற்றின் வழியாக ஐசிஐசிஐ பேங்க் (ICICI Bank) கார்டு மற்றும் ஒன்கார்டு (OneCard) கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

ஒன்பிளஸ் நிறுவனமானது தனது பிரீமியம் / பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் மீதும் தீபாவளி சலுகைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G) மற்றும் ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி சோலார் ரெட் ஸ்பெஷல் எடிஷன் (Solar Red Special Edition) ஆனது ரூ.2,000 தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்.

இவ்விரு ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 9 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐவிருப்பமும் அணுக கிடைக்கும். இது தவிர, ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி (OnePlus 10R 5G) வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.3,000 உடனடி வங்கி தள்ளுபடி மற்றும் ரூ.7,000 சிறப்பு விலை கூப்பனை பெறலாம்.

மேலும், ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி (OnePlus 10 Pro 5G) மற்றும் ஒன்பிளஸ் 10தி 5ஜி (OnePlus 10T 5G) போன்ற மாடல்களை வாங்க விரும்புவோர்களுக்கு ரூ.5,000 உடனடி வங்கி தள்ளுபடிகள் மற்றும் முறையே ரூ.14,000 மற்றும் ரூ.10,000 சிறப்பு விலை கூப்பன் ஆகியவற்றையும் பெறலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus Diwali Offer 2023 Smartphone Discounts Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X