Home
Mobile

இந்த தேதியை குறிச்சு வச்சிக்கோங்க.. இந்தியாவில் அறிமுகமாகும் 3 புதிய OnePlus தயாரிப்புகள்.. அதுல 2 போன்கள்!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமானது பயங்கரமான 'ஓவர்-கான்ஃபிடென்சில்' உள்ளது போல் தெரிகிறது. ஏனென்றால் இந்நிறுவனம் ஒரே நாளில் 2 பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அதென்ன மாடல்கள்? எப்போது அறிமுமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் நிறுவனமானது வருகிற ஜூலை 5 ஆம் தேதியன்று, அதன் நோர்ட் சீரீஸின் கீழ் 2 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்கள் மற்றும் அதே நோர்ட் சீரிஸின் கீழ் ஒரு புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் என மொத்தம் 3 புதிய தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் 3 புதிய OnePlus தயாரிப்புகள்!

அதாவது குறிப்பிட்ட நாளில் ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி (OnePlus Nord 3 5G), ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி (OnePlus Nord CE 3 5G) மற்றும் ஒன்பிளஸ நோர்ட் பட்ஸ் 2ஆர் (OnePlus Nord Buds 2R) ஆகியவைகள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஒன்பிளஸின் இந்த வெளியீட்டு நிகழ்வானது, இந்திய நேரப்படி வருகிற ஜூலை 5 ஆம் தேதி மாலை 7 மணிக்கு தொடங்கும். அறிமுகத்திற்கு முன்னதாக உறுதி செய்யப்பட்ட அம்சங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஆனது அலெர்ட் ஸ்லைடர் (Alert Slider) மற்றும் பிளாட் டிஸ்பிளேவுடன் (Flat Display) வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் டெம்பஸ்ட் கிரே (Tempest Gray) மற்றும் மிஸ்டி கிரீன் ( Misty Green) என்கிற இரண்டு கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. டிசைனை பொறுத்தவரை, இது பேக் பேனலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) கொண்டிருக்கும். ஒன்பிளஸ் இணையதளத்தின்படி, இந்த போனை பற்றிய கூடுதல் விவரங்கள் ஜூன் 28ஆம் தேதி வெளியாகும்.

மற்றொரு புதிய ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி பற்றி பெரிய அளவிலான தகவல்கள் இல்லை. ஆனால் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2ஆர் ஆனது டீப் கிரே (Deep Gray) மற்றும் ட்ரிபிள் ப்ளூ (Triple Blue) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் மேம்படுத்தப்பட்ட ஆடியோ, சிறந்த நாய்ஸ் கேன்சலேஷன் (Noise Cancellation) மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் ஆகியவற்றை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் (அதாவது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்) ஆனது ரூ.32,999 க்கு அறிமுகம் செய்யப்படலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள நோர்ட் பட்ஸ் 2ஆர் ஆனது ரூ.2,299 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus confirmed OnePlus Nord 3 5G OnePlus Nord CE 3 5G OnePlus Nord Buds 2R India Launch on July 5
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X