இந்த 1 காரணம் போதுமே! OnePlus 11 5G போனுக்காக 1 மாசம் என்ன.. 2 மாசம் கூட வெயிட் பண்ணலாம்!

|

ஏற்கனவே, தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே சேர்த்து வைத்துள்ள ஒன்பிளஸ் நிறுவனம், அந்த ரசிகர் வட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்தின் கீழ் அதன் OnePlus 11 ஸ்மார்ட்போனில் ஒரு முக்கியமான அம்சத்தை சேர்த்துள்ளது!

அதென்ன அம்சம்? ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும்? அது வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? எதிர்பார்க்கப்படும் இந்திய விலை நிர்ணயம் என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ஒன்பிளஸ் 11-ல் இடம்பெற போகும் முக்கிய அம்சம்!

ஒன்பிளஸ் 11-ல் இடம்பெற போகும் முக்கிய அம்சம்!

கூடிய விரைவில் அறிமுகமாகவுள்ள ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காமின் லேட்டஸ்ட் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 கொண்டு இயங்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நினைவூட்டும் வண்ணம் இந்த சிப்செட், இது இந்த வார தொடக்கத்தில் ஹவாயில் நடந்த குவால்காம் நிறுவனத்தின் Snapdragon Summit 2022-ல் தான் வெளியிடப்பட்டது.

சத்தம் இல்லாம தூக்கிட்டாங்க! இனிமேல் இந்த Jio பிளானும் கிடைக்காது; முக்கிய நன்மை ஒன்றும் கிடைக்காது!சத்தம் இல்லாம தூக்கிட்டாங்க! இனிமேல் இந்த Jio பிளானும் கிடைக்காது; முக்கிய நன்மை ஒன்றும் கிடைக்காது!

இதுவே முதல் முறை!

இதுவே முதல் முறை!

ஒன்பிளஸ் வெளியிட்டுள்ள ஒரு டீஸர் போட்டோவில் - "ஒன்பிளஸ் 11 என்பது இரண்டாம் தலைமுறை ஸ்னாப்டிராகன் 8 மொபைல் பிளாட்ஃபார்ம் உடன் பொருத்தப்பட்ட முதல் பேட்ச் ஆகும். மேலும் மொபைல் போன்களுக்கான 'ரே டிரேசிங்'கும் (Ray tracing) திறந்து விடப்படும்!

அறியாதோரக்ளுக்கு, Ray tracing என்றால் வீடியோ கேம்களில் உள்ள ஹை-எண்ட் கிராபிக்ஸ் காட்சிகளை மேம்படுத்தும் ஒரு தொழில்நுட்பம் ஆகும்.

கேமிங் கன்சோல்கள் மற்றும் பிசிக்களில் கிடைக்கும் Ray tracing ஆனது குவால்காமின் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப் மூலம் முதல் முறையாக ஸ்மார்ட்போன்களுக்கும் வருகிறது!

வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்களில் இந்த சிப்செட் இடம்பெற உள்ளது!

வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்களில் இந்த சிப்செட் இடம்பெற உள்ளது!

ஒன்பிளஸ் மட்டுமின்றி சியோமி, மோட்டோரோலா, ஒப்போ, விவோ, ஐக்யூ, ரியல்மி, நுபியா, ஹானர், சோனி மற்றும் Asus போன்ற பிராண்டுகளும் கூட குவால்காமின் இந்த லேட்டஸ்ட் சிப்செட்டை தத்தம் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த உள்ளன.

ஆனால், Snapdragon 8 Gen 2-ஐ பேக் செய்யும் முதல் சில ஸ்மார்ட்போன்களில் ஒன்பிளஸ் 11 மாடலும் இடம்பெறும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

நவ.17 க்கு பிறகு.. புது Phone வாங்க போற யாராலுமே இந்த 2 Realme மாடல்களையும் தவிர்க்க முடியாது! ஏன்?நவ.17 க்கு பிறகு.. புது Phone வாங்க போற யாராலுமே இந்த 2 Realme மாடல்களையும் தவிர்க்க முடியாது! ஏன்?

ஒன்பிளஸ் 11 எப்போது அறிமுகமாகும்?

ஒன்பிளஸ் 11 எப்போது அறிமுகமாகும்?

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை பொறுத்தவரை, இரண்டு வகையான தகவல்கள் உள்ளன. சில தகவல்கள் இது அடுத்த மாதம், அதாவது டிசம்பர் மாதம் முதல் வாரமே அறிமுகம் ஆகும் என்கிறது.

இன்னொரு தகவல், ஒன்பிளஸ் 11 ஆனது அடுத்த ஆண்டு (2023) தொடக்கத்தில் தான் அறிமுகமாகும் என்கிறது. இருப்பினும், Xiaomi, Motorola, Oppo மற்றும் iQOO போன்ற நிறுவனங்களுடனான போட்டித்தன்மை காரணமாக இது கூடிய விரைவில் அறிமுகமாகும் என்பது மட்டும் உறுதி!

ஒன்பிளஸ் 11 என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

ஒன்பிளஸ் 11 என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ஆனது QHD+ ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்கும் 6.7-இன்ச் அளவிலான AMOLED டிஸ்ப்ளேவுடன் வரலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + 48 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார் + 32 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா இருக்கலாம்.

இனிமேல் டபுள் கேம் ஆடலாம்.. சைக்கிள் கேப்ல WhatsApp செட்டிங்ஸ்-க்குள் புகுந்த புதிய Mode!இனிமேல் டபுள் கேம் ஆடலாம்.. சைக்கிள் கேப்ல WhatsApp செட்டிங்ஸ்-க்குள் புகுந்த புதிய Mode!

ஒன்பிளஸ் 11 என்ன விலைக்கு அறிமுகமாகும்?

ஒன்பிளஸ் 11 என்ன விலைக்கு அறிமுகமாகும்?

16GB வரையிலான ரேம் மற்றும் 512GB அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ், Android 13 ஓஎஸ் அடிப்படையிலான OxygenOS 13 ஓஎஸ், 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 5000எம்ஏஎச் பேட்டரி போன்ற அம்சங்களுடன் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் "சரியான" விலை விவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை!

இருப்பினும் இது ரூ.50,000 பட்ஜெட்டை சுற்றிய விலை நிர்ணயத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus confirmed new OnePlus 11 5g smartphone powered by latest Snapdragon 8 Gen 2 chipset

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X