யப்பா சாமி.. உங்கள நம்பி வாங்குன அடி போதும்.. பேக் அடிச்ச OnePlus நிறுவனம்.. 2025-ல் பண்ண மாட்டோம்!
கடந்த பல வாரங்களாக ஒன்பிளஸ் நிறுவனம் மீது இருந்த ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு தற்ப்போது சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஒப்போ ஃபைண்ட் என்5 ஆக அறிமுகம் ஸ்மார்ட்போன் உலகளவில் ஒன்பிளஸ் ஓபன் 2 ஆக வரும் என்கிற அனைத்து ஊகங்களுக்கும் ஒன்பிளஸ் நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது
கூடவே 2025 ஆம் ஆண்டில் எந்தவிதமான போல்டபிள் ஸ்மார்ட்போனை வெளியிடப்போவதில்லை என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆடு அக்டோபர் மாதம் அறிமுகமான ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் ஓப்பன் ஆனது எதிர்பார்த்த அளவிற்கு மட்டுமின்றி.. ஓரளவிற்கு கூட வெற்றி பெறவில்லை.

கஸ்டமர்கள் கொடுத்த "அந்த அடியால்" ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த 2024 ஆம் ஆண்டில் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் அப்கிரேட்ட வெர்ஷனை.. அதாவது ஒன்பிளஸ் ஓப்பன் 2 (OnePlus Open 2) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவே இல்லை; அது குறித்து வாய் கூட திறக்கவில்லை.
ஆனால் முன்னதாக வெளியான ஒப்போ பைண்ட் என்3 ஸ்மார்ட்போனிற்கும் ஒன்பிளஸ் ஓப்பன் மாடலுக்கும் இடையே இருந்த ஒற்றுமையின் காரணமாக.. ஒப்போ பைண்ட் என்5 ஸ்மார்ட்போனின் அறிமுகம் அறிவிக்கப்பட்ட வேகத்தில் ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஸ்மார்ட்போனும் வருகிறது என்கிற யூகங்கள் கிளம்பின.
ஆனால் போல்டபிள் ஸ்மார்ட்போன் விஷயத்துல தான் வாங்கிய அடியை இன்னும் மறக்கவில்லை என்பது போல் தெரிகிறது. ஒப்போ பைண்ட் என்5 ஸ்மார்ட்போனிற்கும் ஒன்பிளஸ் ஓப்பன் 2 மடலுக்கும் சம்பந்தம் இல்லை; 2025 இல் போல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ஐடியாவே இல்லை என்று ஒன்பிளஸ் அறிவித்துள்ளது.
ஒப்போ ஃபைண்ட் என்5 ஸ்மார்ட்போன் ஆனது உலகின் மிக மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆக இருக்கும் என்று ஒப்போ டீஸ் செய்து வருகிறது. இப்போதைக்கு மிகவும் மெலிதான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக ஹானர் மேஜிக் வி3 (Honor Magic V3) உள்ளது. ஹானரின் இந்த ஸ்மார்ட்போன் விரிக்கப்படும் போது 4.35மிமீ அளவுடையதாக இருக்கிறது மற்றும் மடிக்கும்போது 9.2மிமீ அளவைக் கொண்டுள்ளது.
ஒப்போ ஃபைண்ட் என்5 ஸ்மார்ட்போன் ஆனது விரிக்கப்படும் போது வெறும் 4மிமீ அளவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை கொண்டிருக்கும் என நம்பப்படுகிறது.கடைசியாக பழைய மாடலில் உள்ள பேட்டரியை விட இதில் மேம்படுத்தப்பட்ட பேட்டரி கெப்பாசிட்டியை எதிர்பார்க்கலாம்.
ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள்: இது 1-120Hz டைனமிக் ரெப்ரெஷ் ரேட், 2268 x 2440 பிக்சல்ஸ் உடனான 7.82-இன்ச் 2கே Flexi-fluid LTPO 3.0 AMOLED இன்னர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. கூடவே 6.31-இன்ச் (1116 x 2484 பிக்சல்ஸ்) 2கே LTPO 3.0 சூப்பர் ஃப்ளூயிட் AMOLED அவுட்டர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது
குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப் உடன் வரும் ஸ்மார்ட்போன் ஹசல்பிளாட் பிராண்டட் ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 48-மெகாபிக்சல் மெயின் கேமரா + 64-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா + 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. இன்னர் டிஸ்பிளேவில் 20-மெகாபிக்சல் மெயின் கேமரா மற்றும் 32-மெகாபிக்சல் கேமராவும் உள்ளது
கடைசியாக ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் ஆனது டூயல்-செல் 4,800mAh பேட்டரியை (3295 + 1510mAh) கொண்டுள்ளது. இது 67W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதன் ரீடெயில் பாக்ஸில் 80W சார்ஜருடன் இடம்பெறும். விலையை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,39,999 என்கிற அறிமுக விலையில் வெளியானது. தற்போது ரூ.1,49,999 க்கு எமரால்டு டஸ்க் மற்றும் வாயேஜர் பிளாக் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








