Home
Mobile

OnePlus-ன் முரட்டு பீஸ்.. ஏப்.28-ல் புது போன்.. 8600mAh பேட்டரி, 120W சார்ஜிங், IP69K ரேட்டிங்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது பேக் டூ பேக் அறிமுகங்களை செய்ய தயாராகி வருகிறது. இந்தியாவில் மே 7 ஆம் தேதி அன்று நார்ட் 6 சீரீஸின் கீழ் 2 புதிய மாடல்களை (நார்ட் சிஇ 6, நார்ட் சிஇ 6 லைட்) அறிமுகம் செய்யவுள்ளது. அதற்கு முன்பாகவே, வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று சீனாவில் ஒரு புதிய கேமிங் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது

அது ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆகும். சீனாவில் அறிமுகமாகும் இந்த மாடல் இந்தியாவில் ஒரு நார்ட் சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆக ரீபிராண்டட் (கிட்டத்தட்ட அதே அம்சஙகளுடன் வேறு மாடல் பெயரின் கீழ்) செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் முன்னதாக ஏஸ் சீரீஸ் கீழ் சீனாவில் அறிமுகமான மாடல்கள் நார்ட் சீரீஸின் கீழ் இங்கே வந்துள்ளன.

ஏப்.28-ல் புது OnePlus போன்.. 8600mAh பேட்டரி, 120W சார்ஜிங், IP69K!

இந்த ஸ்மார்ட்போனின் வழியாக ஒன்பிளஸ் நிறுவனம் ஒரு ஸ்மார்ட்போனிற்கான கேமிங் செயல்திறனை இரட்டிப்பாக்க முயற்சிப்பது போல் தெரிகிறது.அறிமுகத்திற்கு முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை ஒன்பிளஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது.அதன் மூலம் இந்த ஸ்மார்ட்போன் அதிக பிரேம் ரேட் கேமிங் மற்றும் நீட்டிக்கப்பட்ட பேட்டரி லைஃப்க்காக உருவாக்கப்பட்ட, செயல்திறன் சார்ந்த ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆக நிலைநிறுத்தப்படும் என்பதை வெளிப்படையாகவே புரிந்துகொள்ள முடிகிறது.

ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா பேட்டரி திறன்: ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ராவில் 8,600mAh பேட்டரி பொருத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இன்றைய பெரும்பாலான பிளாக்ஷிப் போன்கள் வழங்குவதை விட கணிசமாக பெரியது ஆகும். கூடவே இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது

இதை முழுமையாக சார் செய்தால் ஏழு மணிநேரம் வரை கேம் விளையாடலாம் என்றும், 10 நிமிட விரைவான டாப்-அப் மூலம் சுமார் இரண்டு மணிநேரம் கேம் விளையாடலாம் என்றும் ஒன்பிளஸ் கூறுகிறது. இதற்கு ஆதரவாக, செயல்திறனையும் பேட்டரி ஆயுளையும் மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட, ஒப்போ உருவாக்கிய "எனர்ஜி கான்சென்ட்ரேஷன்" சிப்பும் உள்ளது.

சாதாரண மற்றும் கடும் குளிர் நிலைகளிலும் அளவிடக்கூடிய செயல்திறன் அதிகரிப்பை இது வழங்கும் என்றும், குறைந்த பேட்டரி அளவிலும் நிலையான செயல்திறனை பராமரிக்கும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் கூறுகிறது. பிளாக்ஷிப்ரக போன்களில் பெரிய பேட்டரிகள் ஒரு பொதுவான அம்சமாகிவிட்டன, மேலும் ஒன்பிளஸ் போன்ற பிராண்டுகள் இந்த தரத்தை இன்னும் உயர்த்துகின்றன.

8600mAh பேட்டரியுடன், ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஆனது பிளாக்ஷிப் ரக போன்களுக்கு மத்தியிலும் மட்டுமல்லாமல், செயல்திறனை மையமாக கொண்ட போன்களுக்கு மத்தியிலும் தனித்து நிற்கும். வரவிருக்கும் ஏஸ் 6 அல்ட்ரா ஆனது 8550mAh பேட்டரி, டைமென்சிட்டி 9500 சிப்செட் மற்றும் உள்ளமைக்கப்பட்ட குளிரூட்டும் விசிறி ஆகிய முக்கிய அம்சங்களுடன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி கே90 மேக்ஸுடனும் கடுமையாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- வலுவான தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66, IP68, IP69, மற்றும் IP69K ரேட்டிங்
- இன் ஸ்க்ரீன் அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்ஓஎஸ் 16

மே 7 வரும் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனில் உறுதி செய்யப்பட்டுள்ள அம்சங்கள்: இது டூயல்-ஆக்சிஸ் ஓஐஎஸ் (OIS) ஆதரவு கொண்ட 50எம்பி ப்ரைமரி கேமராவை கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஓஐஎஸ் ஆதரவு இருப்பதால், இது கூர்மையான மற்றும் விரிவான புகைப்படங்களை (குறிப்பாக குறைந்த ஒளி நிலைகளில்) எடுக்க உதவும். இருப்பினும் ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது சரியான சென்சார் குறித்த விவரங்களை வெளியிடவில்லை.

நார்ட் சிஇ 6 கேமராக்களின் மற்றொரு முக்கிய சிறப்பம்சம் 4கே வீடியோ பதிவு ஆதரவாகும். இந்த ஸ்மார்ட்போன், அதன் ப்ரைமரி மற்றும் செல்பீ கேமரா ஆகிய இரண்டிலும் 4கே வீடியோ பதிவு ஆதரவை பெற உள்ளது. இது ஆன்லைனில் பதிவிட அல்லது ரீல்ஸ் அல்லது ஷார்ட்ஸ் உருவாக்க தேவையான விரிவான வீடியோ காட்சிகளுக்கு வழி வகுக்கிறது.

மேலும், முன்பக்க கேமராவில் ஆட்டோஃபோகஸ் ஆதரவுடன் கூடிய 32எம்பி சென்சார் இடம்பெறும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில், அதிக விலை கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) மற்றும் ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஆகிய இரண்டிலும் கூட ஆட்டோஃபோகஸ் உடன் கூடிய 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. ஆக நார்ட் சிஇ 6 மூலம் ஒன்பிளஸ் நிறுவனம் மலிவு விலையில் உயர்தர அம்சங்களை வழங்குவதில் கவனம் செலுத்தும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus Confirmed 8600mAh battery 120W fast charging in OnePlus Ace 6 Ultra Ahead April 28 Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X