Home
Mobile

இறங்கி அடிச்ச OnePlus.. சொன்னபடியே குட்டி Size-ல்.. பெரிய 6260mAh பேட்டரி உடன் புது போன்.. எந்த மாடல்?

ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் 13டி (​​OnePlus 13T) ஸ்மார்ட்போனின் அறிமுகத்தின் வாயிலாக, ஒன்பிளஸ் நிறுவனமானது 'காம்பாக்ட் ஃபிளாக்ஷிப்' பிரிவுக்கு திரும்புகிறது. தற்போது இந்த பிரிவில் சாம்சங், கூகுள் மற்றும் ஒப்போ போன்ற பிராண்டுகள் உள்ளன; இவைகள் அனைத்தும் ரூ.70,000 பட்ஜெட்டில் தத்தம் ஸ்மார்ட்போன்களை கொண்டுள்ளன.

போட்டித்தன்மையுடன் இருக்க ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஸ்மார்ட்போனை ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஏற்கனவே உள்ள காம்பாக்ட் ஃபிளாக்ஷிப்கள் மற்றும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் தற்போது உள்ள அளவுக்கு அதிகமான கேமராக்கள் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனில் இடம்பெறாது. ஆனால் இது சிறந்த பேட்டரி லைஃப்பை வழங்ககும்.

பெரிய 6260mAh பேட்டரி உடன் புது OnePlus போன்!

ஒன்பிளஸ் சீனாவின் தலைவர் ஆன லூயிஸ் ஜீயின் (OnePlus China Head Louis Jie) வெய்போ பதிவின்படி, ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனில் 6260எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். கூடவே தினசரி பயன்பாட்டிற்காக, பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை ஒரு நாளைக்கு ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும் என்றும் கூறியுள்ளார்

ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனில் சிறிய பரிமாணங்கள் இருக்கும் போதிலும், இது அதிக திறன் கொண்ட பேட்டரியை கொண்டுள்ளதால் போதுமான சக்தியை வழங்கும்; எனவே ஒருவர் பவர் பேங்கை எடுத்துச் செல்லவோ அல்லது ஸ்மார்ட்போனை பவர் சேவர் மோட் இன் கீழ் பயன்படுத்தவோ தேவையில்லை என்றும் லூயிஸ் ஜீ குறிப்பிடப்பட்டுள்ளார்.

மேலும் அவர் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் பேட்டரி பயன்பாடு குறித்த ஸ்கிரீன் ஷாட்களையும் பகிர்ந்துள்ளார். இந்த ஸ்கிரீன் ஷாட்கள் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது வெவ்வேறு சூழ்நிலைகளில் சிறந்த பேட்டரி லைஃப்பை வழங்குவதை காட்டுகின்றன. இந்த ஒப்பீடு ஏற்கனவே உள்ள சிறிய ஃபிளாக்ஷிப் போன்களுடன், குறிப்பாக ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் உடன் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் பேட்டரி தொழில்நுட்பத்தை க்ளேசியர் பேட்டரி (Glacier Battery) என்று அழைக்கிறது. இது சமீபத்தில் பல சீன ஸ்மார்ட்போன்களில் காணப்படும் அதே சிலிக்கான் கார்பன் பேட்டரி தொழில்நுட்பமாக இருக்கலாம். இது அதன் எனர்ஜி-டென்ஸ் பண்புகள் காரணமாக பேட்டரியை அதிக திறனை தக்கவைக்க அனுமதிக்கிறது மற்றும் வேகமாக சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.

முன்னதாக ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் முக்கிய கேமரா அம்சங்களும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. கிடைக்கப்பெற்ற தகவலின்படி ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் 50எம்பி சோனி ப்ரைமரி கேமராவை கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

வெய்போ வழியாக இது "அதே ப்ரைமரி கேமராவை" கொண்டிருப்பதாக ஒன்பிளஸ் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் உள்ள அதே ப்ரைமரி சென்சாரை குறிக்கலாம். இது 2x ஜூம் மற்றும் 4x லாஸ்லெஸ் ஜூம் கொண்ட 50எம்பி டெலிஃபோட்டோ லென்ஸையும் கொண்டிருக்கும்.

ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் கேமராக்கள் ஒப்போ நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் உள்ளதை போலவே, அதே இமேஜ் அல்காரிதத்தை கொண்டிருப்பதும் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. கடைசியாக ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில், 3 செக்கென்ட் லைவ் போட்டோ மோட் கிடைக்கும்.

ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்?
- இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் கொண்ட மலிவான ஃபிளாக்ஷிப் மாடலாக வரக்கூடும்
- டிஸ்பிளேவை பொறுத்தவரை 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.32-இன்ச் LTPO AMOLED டிஸ்பிளே இடம்பெறலாம்.

- பேட்டரியை பொறுத்தவரை இது 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,260mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்
- இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உடன் வரலாம்
- இது ரூ.54,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus Confirmed 6260mAh Battery and Compact Design in OnePlus 13T Ahead Launch on April 24
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X